Latest News

September 30, 2015

புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பட்டியலிலிருந்து உலகத் தமிழர் பேரமைப்பை நீக்கப் போவதாக எச்சரிக்கை!
by Unknown - 0

ஜெனீவா அறிக்கையின் காரணமாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மத்தியில் கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை என்ற விடயம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பெரிதும் ஏமாற்றத்துக்குள் தள்ளியுள்ளது.

உலகத் தமிழர் பேரவை தவிர சுமார் 11 முக்கிய அமைப்புகள் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

அத்துடன் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் ரஆத் ஹுசைனுக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பியுள்ளன.

எனினும் உலகத் தமிழர் பேரமைப்பு இவற்றில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக ஏனைய அமைப்புகளுக்கும் உலகத் தமிழர் பேரமைப்புக்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பட்டியலிலிருந்து உலகத் தமிழர் பேரமைப்பை நீக்கப் போவதாக பிரித்தானிய தமிழ் அமைப்பு உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் கடுமையாக எச்சரித்துள்ளன.

மேலும் சுவிஸ் தமிழர் பேரவை இந்தக் கருத்து வேறுபாட்டின் காரணமாக உலகத் தமிழர் பேரவையில் இருந்து பிரிந்து இயங்குவதாக அறிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments