Latest News

September 22, 2015

கொக்கா கோலாவில் கரப்பான் பூச்சி
by admin - 0

களனி கங்கையில் கழிவு எண்ணெய் கலந்து கொழும்பு மக்களுக்கு டீசல் குடிக்க வழங்கிய அமெரிக்காவின் கொக்கா கோலா நிறுவனம் இம்முறை 500 மில்லிலீட்டர் கொக்கா கோலா போத்தலில் கரப்பான் பூச்சியை கலந்து பரிசு வழங்கியுள்ளது.

இந்த அதிஸ்டத்தை பெற்றுக் கொண்டவர் வத்தளை பகுதியைச் சேர்ந்த ஜனக புஸ்பகுமார என்பவராவார். அண்மையில் அவர் கொள்வனவு செய்த கொக்கா கோலா போத்தலுக்குள் ஏதோ ஒன்று இருப்பதை கண்டு பரிசோதனை செய்தபோது இறந்த கரப்பான் பூச்சி இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜனக்க என்பவர் கொக்கா கோலா வாங்கிய கடைக்குச் சென்று அதன் உரிமையாளர் மூலம் முகவருக்கு போத்தல் இலக்கத்தை வழங்கி விசாரித்த போது அது கொக்கா கோலா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என உறுதி செய்யப்பட்டது. 


இந்நிலையில் எந்த காரணத்தை கொண்டும் தகவலை ஊடகங்களுக்கு கசியவிட வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட நபருக்கு நட்டஈடு வழங்குவதாகவும் கொக்கா கோலா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

உணவு ஹைட்ரஜன் (Food hygiene) தொடர்பில் உலகத்திற்கே பாடம் படிப்பிற்கும் அமெரிக்கா இவ்வாறான சம்பவங்கள் குறித்து என்ன நிலைப்பாட்டில் உள்ளதென்பதை அறிந்து கொள்வது காலத்தின் தேவை. மேலும் கொக்கா கோலா நிறுவனம் பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துவது மீண்டும் அதனை பயன்படுத்தவே என்பது தெளிவாகிறது அல்லவா..?

« PREV
NEXT »

No comments