Latest News

September 22, 2015

எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படும் மருந்தொன்றின் விலை ஐயாயிரம் சதவீதத்தால் அதிகரிப்பு
by Unknown - 0

எய்ட்ஸ் நோயாளிகள் பயன்படுத்திவருகின்ற 62 வருட காலமாக புழங்கப்பட்டுவரும் மருந்து ஒன்றின் விலையை ஐயாயிரம் சதவீதம் அதிகரித்துள்ள தமது முடிவு சரிதான் என அம்மருந்தைப் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் வாதிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோனால் வரக்கூடிய ஒட்டுண்ணித் தொற்று நோயான டொக்ஸோப்ளாஸ்மோஸிஸ் என்ற நோயின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் டாராப்ரிம் என்ற மருந்து ஆகும்.

ஒரு தடவை பயன்பாட்டுக்கு 13 டாலர்கள் ஐம்பது செண்ட்டாக இருந்த இந்த மருந்தின் விலை தற்போது எழுநூற்றைம்பது டாலராக உயர்த்தப்பட்டுள்ளது மேற்கொண்டு ஆராய்ச்சிகளைச் செய்ய நிதி திரட்டுவதற்காகத்தான் என்று டாராப்ரிம் மருந்தைத் தயாரிக்கும் டியூரின் ஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்ட்டின் இஷ்க்ரெலி கூறுகிறார்.

டொக்ஸோப்ளாஸ்மோஸிஸ் சிகிச்சையில் பல தசாப்தங்களாக குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமோ ஆராய்ச்சிகளோ இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அந்நோய்க்கு புதிய மருந்துக்கான அவசியம் அவ்வளவு அதிகமாக இல்லை என்று வாதிடும் மருத்துவ சேவை நிறுவனங்கள், தமது விலையேற்ற முடிவை மருந்து உற்பத்தி நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
« PREV
NEXT »

No comments