Latest News

August 21, 2015

தேசிய பாதுகாப்புக்கு தலைமை தாங்க தயார்-மஹிந்த
by Unknown - 0

தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்புக்கு தலைமைத்துவம் வகிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் போட்டி யிட்டு வெற்றிலைச் சின்னத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, நாம் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஏற்கப் போவதில்லை என நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக செயற்படப்போவதாகத் தெரிவித் துள்ள அவர்: எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுவே தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

பொதுத் தேர்தல் பெறுபேறு தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்:

“2015 பொதுத் தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற பெறுபேறுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த தேர்தலில் எமது கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர் களுக்கும் இரவு பகல் பாராது பாடுபட்ட எமது கட்சியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த் துக்களை தெரிவித்துக்கொள் கிறேன்.

கிடைத்துள்ள மக்கள் ஆணை யின்படி நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றும் பாராளுமன்றில் ஆசனம் ஏற்று இதுவரை நாட்டுக்கு மக்களுக்கு செய்த சேவையை தொடர்ந்து செய்வேன் என்றும் இந்த சந்தர்ப் பத்தில் விருப்பத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார். 
« PREV
NEXT »

No comments