Latest News

August 04, 2015

தமிழர்களுக்கு செய்த அட்டூழியம்: வெள்ளை வேன்களை கொடுத்தது யார்? அதிரும் தகவல்
by kavinthan Sivakurunathan - 0


abc by athirvu
தமிழர்களை அழிக்க எத்தனை நாடுகள் கங்கணம் கட்டி அலைகிறது என்று பார்த்தால் ஒரு பட்டியலே போடலாம் போல இருக்கிறது. அமெரிக்கா , இந்தியா , தென்னாபிரிக்கா , நோர்வே வரிசையில் தற்போது அவுஸ்திரேலியாவும் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நெஞ்சை பதறவைக்கும் பல திடுக்கிடும் தகவல்களை அன் நாட்டின் ABC தொலைக்காட்சியே வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. ஆனால் அப்படி ஒன்று நடக்காதது போல தமிழ் மீடியாக்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எங்கோ ...யாரோ ஒருவரால் எழுதப்படும் செய்தியை காப்பி அடித்து தமது இணையத்தில் போட்டு பிழைப்பு நடத்தி வரும் இவர்களின் கண்களில் இந்த விடையங்கள் அகப்படவில்லையா ? சரி விடையத்திற்கு வருவோம்..

அவுஸ்திரேலியப் பொலிசார் ரகசியமான முறையில் இலங்கைப் பொலிசாருக்கு உதவி வருவது குறித்து , அன் நாட்டு தேசிய தொலைக்காட்சி நேற்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பலர் காணமல் போதலை, கொலை , மற்றும் சித்திரவதைகளோடு தொடர்புடையவர்கள் யார் என்று கேட்டால் சிறு பிள்ளை கூட சொல்லிவிடும் அது C.I.D பிரிவினர் தான் என்று. அவர்களுக்கு தான் அவுஸ்திரேலியப் பொலிசார் உதவியுள்ளார்கள். அவர்கள் எதனை எல்லாம் கொடுத்துள்ளார்கள் தெரியுமா ? இலங்கையில் உள்ள எந்த நபரின் மோபைல் போனையும் ஒட்டுக் கேட்க்க, மேலும் மோபைல் போனில் அழிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஈமெயில்களை மீண்டும் ரிக்கவரி(recover) செய்ய தேவையான உபகரணங்களை கொடுத்துள்ளார்கள். அது மட்டுமா ,வெள்ளை வேன்களையும் அவர்களே கொடுத்துள்ளார்கள்.

இந்த வகையான வெள்ளை வேன்களில் ஆட்களை கடத்தவும் முடியும், கடத்த வேண்டிய ஆளை அருகில் இருந்து நோட்டமிடவும் முடியும். அவர் மோபைல் போனில் யாரோடு உரையாடுகிறார் என்று , வேனில் இருந்தபடியே வேவுபார்த்து பின்னர் அவரை தூக்கவும் முடியும். இந்த கைங்கரிய எழிய வேலைகளை அவுஸ்திரேலியா செய்துள்ளது. அட ஏன் ? என்ற கேள்வி எழும் அல்லவா ? அவர்கள் இதுபோன்ற உதவிகளை செய்தது அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை அகதிகளை சி.ஐ.டியினர் மடக்கி பிடிப்பார்கள் என்று தானாம். ஆனால் அதனை பாவித்து பல அதி நவீன பொருட்களை இலவசமாக பெற்றுக்கொண்ட சிங்கள சி.ஐ.டி யினர் அதனை தமிழர்களுக்கு எதிராக பாவித்து. தமிழர்களையே சித்திரவதை செய்துள்ளார்கள். அதுமட்டும் அல்ல IBM கம்பியூட்டர் கம்பெனி பிரத்தியேகமாக தயாரித்த(எந்த தனி நபருக்கும் கிடைக்காது- -- அரசாங்கம் மட்டுமே வாங்க கூடிய) i2 அதி நவீன சாப்ட் வேர்களை அவுஸ்திரேலியா கொடுத்துள்ளது.

அதில் வெறும் பெயர்களை மற்றும் படங்களை போட்டுக்கொண்டு வந்தால் போதும். அது வெவ்வேறு வலை அமைப்புகள். அதாவது ரிவீட்டர் , பேஸ் புக் என்று உலகில் உள்ள அனைத்து வலை அமைப்புகளையும் அது ஆராய்ந்து , குறித்த நபர்களின் உறவினர்கள் யார் யார் ? எங்கே இருக்கிறார்கள் என்பது போன்ற சகல தகவல்களையும் அவர்களுக்கு கொடுத்துவிடும். ஒரு புலிகள் இயக்க உறுப்பினர் , அவரது தொடர்புகளை அறிய இது மிகவும் துல்லியமான மென் பொருள்(சாப்ட் வேர்) ஆகும். இதனை கூட அவுஸ்திரேலியா 4ம் மாடியில் உள்ள சிங்கள நபர்களுக்கு வழக்கியுள்ளது. இதனை பாவித்தே பலரை கொழும்பில் கைது செய்துள்ளார்கள் பொலிசார். இப்போது பலருக்கு இருந்த சந்தேகங்கள் தீர்ந்து இருக்கும் என நாம் கருதுகிறோம்.. எனது உறவினர் எப்படி கைதானார். சிங்களப் பொலிசார் அவரை எப்படிப் பிடித்தார்கள் என்று நீங்கள் ஒரு காலத்தில் நினைத்திருப்பீர்கள்.

மேலும் கொழும்பில் உள்ள 4 சி.ஐ.டி அலுவலகங்களை , அவர்கள் புதுப்பித்துக் கொடுத்துள்ளார்கள். தேவையான கம்பியூட்டர்களை அவர்கள் , கொடுத்து மேலும் உதவிகளை செய்து கொடுத்துள்ளார்கள். அதாவது முன்னர் சற்று ஒழுங்கில்லாத இடத்தில் வைத்து சித்திரவதை செய்தீர்கள். இப்ப நாங்கள் நல்ல இடம் ஒன்றைக் கட்டி தந்து இருக்கிறோம். அந்த புது இடத்தில் வைத்து சித்திரவதை செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். நல்ல ஆட்சி இலங்கையில் உதித்து விட்டதாக கூறி பல தமிழர்கள் ,நாட்டுக்குச் சென்று வருகிறார்கள். ஆனால் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் கூட ,எனது 16 வயது சகோதரனை சி.ஐ.டி யினர் அழைத்துச் சென்று அடித்தார்கள் என்று கூறுகிறார் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தமிழர். ஆக மொத்தத்தில் திரை மறைவில் தற்போதும் சித்திரவதைகளும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும் இன்னும் நடைபெற்று வருகிறது என்பதே உண்மை நிலையாகும்.

இதனை தமிழர்கள் கூறவில்லை. அவுஸ்திரேலியாவில் உள்ள அன் நாட்டு தேசிய தொலைக் காட்சி கூறுகிறது. ஆனால் எங்களைப் பாருங்கள் இலங்கையில் ஏதோ ஜனநாயகம் திரும்பிவிட்டதாகவும். தேர்தலில் யார் வெல்லுவார்கள் என்று ஒரு கோஷ்டியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை பிடிக்கவேண்டும் என்று ஒரு கோஷ்டி இலவச பேப்பர் அடித்து யாழில் வெளிவிடுவதுமாக இருக்கிறது எங்கள் நிலை. வெட்கி தலை குனிவை ஏன் ஏற்படுத்துகிறீர்கள் ? தமிழர்களே ?

லண்டனில் உள்ள தமிழர்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்வார்களா ? அவுஸ்திரேலிய தூதரகத்தை முற்றுகையிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்துவார்களா ? பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.

சில நாடுகளில் வீடியோ தெரியாது: அன் நாடுகளில் உள்ளவர்கள் எமது இணையத்தில் உள்ள இந்த வீடியோவைப் பார்க முடியும்.:

அதிர்வுக்காக,

கண்ணன்


நன்றி அதிர்வு 
« PREV
NEXT »

No comments