தமிழ் மக்களின் துயர்களுக்கு தீர்வைக்காணாதுவிடத்து ஐக்கிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 20 ஆசனங்களை வெற்றிக்கொள்ள முடியும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் சிங்குவா செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி பொதுத்தேர்தலில் வெற்றிப்பெறுமானால் கூட்டமைப்பு வெளியில் இருந்து அதன் ஆதரவை முன்னணியின் அரசாங்கத்துக்கு வழங்கும்.
எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்வரை கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையாது என்று பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபாலவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமானால் அதனுடன் சேர்ந்து இயங்குவது முடியாத காரியம் என்று பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment