Latest News

July 26, 2015

பாலியல் தொழிலாளர்களுடன் நிர்வாணமாக காணப்பட்டார் பிரிட்டிஷ் மேலவையின் துணை சபாநாயகர்!
by Unknown - 0

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மேலவை, அதாவது பிரபுக்கள் சபையின் துணைத் தலைவர் செவெல் பிரபு பதவி விலகியுள்ளார்.

இங்கே லண்டனிலிருந்து வெளியாகும் தி சன் தேசிய செய்தி பத்திரிகை, அவர் நிர்வாணமான நிலையில், பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் கொக்கெயின் உறிஞ்சுவதைக் காட்டுக் காணொளியை வெளியிட்டதை அடுத்தே அவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் கண்ணியங்கள் பேணப்பட வேண்டும் என்று கூறி அது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு பொறுப்பாக இருந்தார் செவெல் பிரபு.

அவரது நடவடிக்கை குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற மேலவையின் சபாநாயகர் டிசோசா சீமாட்டி, செவெல் பிரபுவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இது குறித்து விசாரிக்குமாறு காவல்துறையிடம் தான் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




நன்றி பிபிசி தமிழ் 

« PREV
NEXT »

No comments