Latest News

July 22, 2015

பாரதூர குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை கிடையாது -யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு
by admin - 0

பாரதூர குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
தேர்தல் காலத்தில் பிணை கிடையாது
-யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு-
 
 
பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலங்களில் பிணை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் அது வன்முறைகளை தூண்டுவதாக அமையும் எனத் தெரிவித்து பிணை மனுக் கோரிக்கை ஒன்றை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளங்செழியன்  நேற்று நிரகரித்தார்.
 
கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி அல்வாய் பகுதியில் சின்னதம்பி என்பவர் அடித்து கொலை செய்யபட்டார். இக்கொலையில் முதலாவது சந்தேக நபரான முத்துலிங்கம் சந்திரகுமார் என்பவர் கைது செய்ய்பட்டார்.இவரிடம் நடத்திய விசாணையின் அடிப்படையில் சுப்பிரமணியம் வசீகரன் என்ற மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருந்தார்.சூ
 
கைது செய்யப்பட் இருவரும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் நேற்று முன்தினம் சட்டதரணி ஒருவர் யாழ்.மேல் நதிமன்றத்தில் பிணை விண்ணப்பத்தினை சமர்ப்பித்திருந்தார். இது குறித்த விசாரணை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
இதன்போது சந்தேக நபர்கள் மிகக் குறுகிய காலமே விளக்கமறியலில் இருந்துள்ளார். மேலும்; பருத்துறை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. தேர்தல் காலங்களில் பாரதூரமான செயல்களில் கைது செய்யபட்டு விளக்கமறியளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது தேர்தல் வன்முறைகளை தூண்டுவதாக அமையும். எனவே, தேர்தல் வன்முறைகளை கட்டுபடுத்தும் நோக்கில் பிணை வழங்கமுடியாது என நீதிபதி தெரிவித்தார்.
 
தொடர்ந்து பிணை விண்ணப்பத்தை எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
« PREV
NEXT »

No comments