Latest News

March 29, 2015

இரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி?
by admin - 0

இரட்டை பிரஜாவுரிமை குறித்து குடிவரவு - குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க விளக்குகின்றார் 
நேர்காணல்: எஸ்.கணேசன் 

இரட்டை பிர­ஜா­வு­ரி­மையை அங்­கீ­கரி க்கும் நாடு­களில் வசிக்கும் இலங்கை வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு இரட்டை பிர­ஜா­வுரி­மை க்கு விண்­ணப்­பிக்க முடியும். விண்­ணப்ப படி­வங்கள் www.immigration.gov.lk என்ற எமது இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இவற்றை பதி­வி­றக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அந்­தந்த நாடு­க­ளி­லுள்ள எமது தூத­ர­கங்­களில் கைய­ளிக்க முடியும். அல்­லது குடி­வ­ரவு – குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கு வந்து நேர­டி­யாக கைய­ளிக்க முடியும். எனவும் வெளி­நா­டு­களில் வசிக்கும் இலங்கை வம்­சா­வ­ளி­யினர் இரட்டை பிர­ஜா­வு­ரிமை பெறு­வது எப்­படி? என்று குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள கட்­டுப்­பாட்­டாளர் நாயகம் நிஹால் ரண­சிங்க வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் விவ­ரித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது.

கேள்வி: இரட்டை பிர­ஜா­வு­ரிமை குறித்து விளக்­கு­வீர்­களா? குறிப்­பாக எந்­தெந்த நாடு­களில் வசிக்கும் இலங்­கை­யர்கள் பிர­ஜா­வு­ரிமை பெறு­வ­தற்கு தகு­தி­யு­டை­ய­வர்­க­ளாவர்?

பதில்: இரட்டை பிர­ஜா­வு­ரி­மையை அங்­கீ­க­ரிக்கும் நாடு­களில் வசிக்கும் இலங்­கை­யர்­க­ளுக்கு இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடியும். உலகில் சில நாடு­களில் இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்கு அங்­கீ­காரம் வழங்­கு­வ­தில்லை. எனவே, அங்கீகரிக் கும் நாடு­களில் வசிக்கும் முன்னாள் இலங்­கை­யர்­களும் இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடியும்.

கேள்வி: இவ்­வாறு இரட்டை பிர­ஜா­வுரி­ மைக்கு விண்­ணப்­பிக்கும் வெளி­நா­டு­களில் வசிக்கும் முன்னாள் இலங்கை பிர­ஜைகளு க்கு இலங்­கையில் குறிப்­பிட்­ட­ளவு சொத்­து கள் இருக்க வேண்­டுமா?
பதில்: 55 வய­துக்கு மேற்­பட்­ட­வ­ரா­க­வி­ருந்தால் அல்­லது இலங்­கையில் 25 இலட்ச ரூபா­வுக்கு அதி­க­மான சொத்­துகள் இருக்க வேண்டும். அல்­லது இலங்கை மத்­திய வங்கி, அங்­கீ­க­ரித்த வங்­கி­யொன்றில் மூன்று வரு­டங்­க­ளுக்கு மேலாக 25 இலட்ச ரூபாவை நிரந்­தர வைப்­பி­லிட்­டி­ருக்க வேண்டும். அல்­லது வதி­யாதோர் வெளி­நாட்டு நாணய கணக்கில் (N.R.F.C) 25 ஆயிரம் டொலர்கள் மூன்று வரு­டங்­க­ளுக்கு மேலாக வைப்­பி­லி­ருந்­தி­ருக்க வேண்டும். மற்றும் திறை­சேரி உண்­டி­யல்கள் அல்­லது பங்­கு­களில் 25 டொலர்­க­ளுக்கு அதி­க­மான தொகை மூன்று வரு­டங்­க­ளுக்கு மேல் முத­லீடு செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். மேலும் கல்வி மற்றும் தொழில்சார் ரீதியில் டிப்­ளோமா அல்­லது பட்டம் பெற்­றி­ருந்தால் அவர்­க­ளுக்கும் விண்­ணப்­பிக்க முடியும்.

கேள்வி: குறிப்­பாக, எந்­தெந்த நாடு­களில் வசிக்கும் இலங்கை வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடியும் எனக்­ கூ­ற­மு­டி­யுமா?

பதில்: இதன் அடிப்­படை என்­ன­வென் றால். குறிப்­பாக, நோர்வே இரட்டை பிர­ஜா
வு­ரி­மையை அங்­கீ­க­ரிக்­கு­மானால் அங்­கு ள்ள இலங்­கை­யர்கள் விண்­ணப்­பிக்­கலாம்.

கேள்வி: இரட்டை பிர­ஜா­வு­ரி­மையை அங்­கீ­க­ரிக்கும் நாடுகள் இனம் காணப்­பட்­டுள்­ளவை?

பதில்: ஐக்­கிய இராச்­சியம், ஐக்­கிய அமெ­ரிக்கா, கனடா, அவுஸ்­தி­ரே­லியா பிரான்ஸ், சுவிட்ஸ்ர்­லாந்து, சுவீடன், நியூஸ்­லாந்து, இத்தாலி போன்ற ஒன்­பது நாடு­களில் வசிக்கும் இலங்கை வம்­சா­வ­ளி­யினர் விண்­ணப்­பிக்­கலாம்.

கேள்வி: இந்­தி­யாவில் வசிக்கும் இலங்கை வம்­சா­வ­ளி­யி­னரும் இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யுமா?

பதில்: இந்­தியா இரட்டை பிர­ஜா­வு­ரி­மையை அங்­கீ­க­ரிக்­க­வில்லை. அதனால் அங்­குள்ள இலங்கை வம்­சா­வ­ளி­யினர் இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யாது.

கேள்வி: இலங்­கையின் இரட்டை பிர­ஜா ­வு­ரிமை நிறுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்னர் விண்­ணப்­பித்­த­வர்களுக்கு இலங்கை மீண்டும் இரட்டை பிர­ஜா­வு­ரிமை வழங்கத் தீர்­மா­னித்த பின்னர் மீண்டும் புதி­தாக விண்­ணப்­பிக்க வேண்­டுமா?

 சிலர் இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பித்து பணம் செலுத்­தும்­படி அறி­விக்­கப்­பட்ட நிலையில் இரட்டை பிர­ஜா­வு­ரிமை வழங்கும் நடை­முறை இலங்­கையில் இடை­நி­றுத்­தப்­பட்­டது. இவர்­களின் நிலை­யென்ன?

பதில்: விண்­ணப்­பிக்கும் தகு­திகள் மாறு­ப­ட­வில்லை. இருந்தும் விண்­ணப்­பங்கள் மாற்­ற­ம­டைந்­துள்­ளன. எனவே அவர்கள் புதி­தாக விண்­ணப்­பிக்க வேண்டும்.
கேள்வி: வெளி­நா­டு­களில் வசிக்கும் இல ங்கை வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு இரட்டை பிரஜா­
வு­ரிமை வழங்­கு­வதால் இலங்­கைக்கு என்ன நன்­மைகள் கிடைக்கும்?
பதில்: இலங்­கையின் வர்த்­தக, பொரு­ளா ­தார அபி­வி­ருத்­திக்கு உந்து சக்­தி­யாக விள ங்கக் கூடி­ய­வர்­க­ளுக்கே இரட்டை பிர­ஜாவு­ ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது.
கேள்வி: இரட்டை பிர­ஜா­வு­ரிமை பெறு­வ­தற்­கான விண்­ணப்ப படி­வங்கள் இப்­போது விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­ற­னவா?

பதில்: ஆம் கடந்த 23ஆம் திக­தி­யி­லிருந்து விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. விண்ணப்பபடி­ வங்கள் www.immigration.gov.lk என்ற எமது இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப்பட்­ டுள்­ளது. இவற்றை பதி­வி­றக்கம் செய்து
அதை பூர்த்தி செய்து அந்­தந்த நாடு­க­ளி­லுள்ள எமது தூத­ர­கங்­களில் கைய­ளிக்க முடியும். அல்­லது குடி­வ­ரவு – குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கு வந்து நேர­டி­யாக கைய­ளிக்க முடியும்.

கேள்வி: பணம் எங்கு செலுத்­து­வது? விண்­ணப்­பிக்கும் நாடு­களில் செலுத்த வேண்­டுமா? அல்­லது இலங்­கைக்கு வந்து தான் செலுத்த வேண்­டுமா?

பதில்: இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்­கான விண்­ணப்­பங்கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் அனு­ம­தியில் கைச்­சாத்­திட்­டதும் விண்­ணப்­ப­தா­ரிகள் இலங்கை வந்து பணத்தை செலுத்த வேண்டும்.

கேள்வி: விண்­ணப்­பித்த நாளி­லி­ருந்து நடை­மு­றைகள் பூர்த்தி செய்­யப்­பட்டு பிர­ஜா­வு­ரிமை வழங்க எவ்­வ­ளவு கால­மெ­டுக்கும்?

பதில்: இந்த நடை­மு­றைகள் பூர்த்­தி­யாக சுமார் ஒன்­றரை மாதங்­க­ளா­கலாம். விண்­ணப்­பங்கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டதும், விண்­ணப்­ப­தாரி பணம் செலுத்­திய பின்னர் சான்­றி­தழில் அமைச்சர் கைசாத்­தி­டுவார். அதன்­பின்னர் உரி­ய­வ­ரிடம் கைய­ளிக்­கப்­படும்.

கேள்வி: கடந்த காலங்­களில் சுமார் 400 வெளி­நா­டு­க­ளி­லுள்ள இலங்­கை­யர்கள் கறுப்பு பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டனர். இவர்­க­ளுக்கு இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யுமா?

பதில்: இலங்­கையின் தேசிய பாது­காப்பு, தேசிய பொரு­ளா­தாரம், தேசிய ஒற்­றுமை மற்றும் தேசிய நல­னுக்கு பங்கம் விளை­விக்கக் கூடிய நபர்­க­ளுக்கு இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யாது.

கேள்வி: இரட்டை பிர­ஜா­வு­ரிமை பெற எவ்­வ­ளவு பணம் செலுத்த வேண்டும்?

பதில்: பெரி­ய­வர்­க­ளுக்கு 2,50,000 ரூபா. விண்­ணப்­ப­தா­ரியின் கணவன் அல்­லது மனை­விக்கு 50,000, திரு­ம­ண­மா­காத 21 வய­துக்கு குறைந்த பிள்­ளை­க­ளுக்கு 50,000 ரூபா செலுத்த வேண்டும்.

கேள்வி:இரட்டை பிர­ஜா­வு­ரிமை குறித்து உள்­நாட்டு வெளி­நாட்டு பிர­ஜை­க­ளுக்கு விசே­ட­மாக குறிப்­பிட வேண்­டிய விட­யங் கள் ஏதா­வது இருக்­கின்­ற­னவா?

பதில்: இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அதை பெற உங்­க­ளுக்­குள்ள தகு­தி­களை சான்­று­க­ளுடன் குறிப்பி­ டு­வ­துடன், முறை­யாக விண்­ணப்­பிக்க வேண்டும். விண்­ணப்­பிக்க வேண்­டிய வழி­மு­றைகள் எமது இணை­யத்­த­ளத்தில் தெளி­வாக விளக்­கப்­பட்­டுள்­ளன. விண்­ணப்­பங்கள் கிடைத்­ததும் அதை ஒரு குழு ஆராய்ந்து சிபாரிசுகளை செய்யும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பி அவரது கைச்சாத்து பெறப்படும்.

கேள்வி: வடக்கிலிருந்து பெரும் தொகை யானோர் வெளிநாடுகளில் வசித்து வரு கின்றனர். இவர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்று வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்யமுடியுமா?

பதில்: இரட்டை பிரஜாவுரிமை பெற்ற ஒரு நபர் இலங்கை பிரஜையொருவர் பெரும் சகல உரிமைகளையும் பெற உரித்துடைய வராகின்றார். எனவே அவர் இலங்கையில் எந்த பகுதியிலும் முதலீடு செய்ய முடியும்.
கேள்வி: இரட்டை பிரஜாவுரிமை பெறுப வர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியு மா? வாக்களிக்க முடியுமா?
பதில்: தேர்தல்கள் சட்டத்திட்டங்களின் படி தேர்தல் ஆணையாளரே அதை தீர்மானிப்பார்.
« PREV
NEXT »