Latest News

February 27, 2015

குமார் சங்கக்கார ஐ.தே.கவில் போட்டி!
by Unknown - 0

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் குமார் சங்கக்காரவை போட்டியிடச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி மாவட்டத்தில் குமார் சங்கக்கார போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னதாகவே இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சமூக வலைத் தளங்களின் ஊடாக பொது வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்த துசார வன்னியாரச்சியும் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார்.

துசார வன்னியாரச்சியின் தொடர்புடன் குமார் சங்கக்கார தேர்தலில் போட்டியிட இணங்கியுள்ளார். உலகக் கிண்ண போட்டிகள் முடிவடையும் வரையில் இந்த விபரங்களை வெளியிடுவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டத்தினர் இணங்கியிருந்தனர் என சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறெனினும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என குமார் சங்கக்கார ஏற்கனவே குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »