Latest News

February 27, 2015

யாழில் பெரும்போக நெல்கொள்வனவு நாளை ஆரம்பம்
by admin - 0

 நெல்
 நெல்
கூட்டுறவுச் சங்கம் மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் யாழ். மாவட்டத்தில் 2014-2015 ஆம் ஆண்டிற்கான பெரும்போக நெல்கொள்வனவு எதிர்வரும்  சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.   நெல் சந்தைப்படுத்தும் சபையினால் சாவகச்சேரி பகுதியிலும்  பண்டத்தரிப்பு, உடுப்பிட்டி,  கொடிகாமம், நீர்வேலி, மானிப்பாய், அச்சுவேலி, ஆகிய பகுதிகளின் கூட்டுறவு சங்கங்களூடாக மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் நெல் கொள்வனவு எதிர்வரும்  சனிக்கிழமை முதல்  ஆரம்பமாகவுள்ளது.   இதன்படி கீரிச்சம்பா மற்றும் சம்பா அரிசி கிலோகிராம் ஒன்று 50 ரூபாவிற்கும் நாட்டரிசி கிலோகிராம் ஒன்று 45 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.   நெல்லின் ஈரப்பதம் உயர்ந்த பட்சமாக 14 வீதம் இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள்  கமநல சேவைகள் பிராந்திய உத்தியோகத்தர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமுள்ள விண்ணப்பப்படிவத்தை  பூரணப்படுத்தி  அவர்களின் அத்தாட்சியுடன் சாவகச்சேரியிலுள்ள கமநல திணைக்களத்தின் களஞ்சியசாலையில் தமது நெல் விற்பனையை மேற்கொள்ள முடியும்.   மேலும் கூட்டுறவு சங்கங்களினூடாக நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் மேற்குறித்த சங்கங்களின் பொது முகாமையாளர் அல்லது தலைவருடன் தொடர்பு கொண்டு தமது நெல் விற்பனையை மேற்கொள்ள முடியும்.     இதன்படி இவ்வருடம் ஒரு விவசாயியிடமிருந்து தலா 2000 கிலோகிராம் நெல்லினை பெற்றுக்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது. 
« PREV
NEXT »