Latest News

January 25, 2015

மகிந்த அரசுபோல் ஊடக அடக்குமுறையை தொடரும் மைத்திரி அரசு
by admin - 0

மகிந்த அரசுபோல் ஊடக அடக்குமுறையை தொடரும் மைத்திரி அரசு 

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை முழுமையாக கடைப்பிடிக்கப் போவதாக கூறிய அரசாங்கம், ஊடகங்களுக்கு தகவல் செல்வதை கட்டுப்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

காலியில் கண்டுபிடிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சொந்த ஆயுதங்கள் மற்றும் கோத்தபாயவினால் வங்கி ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டிருந்த பணம் என்பன தொடர்பில் நடைமுறை பாதுகாப்பு செயலாளர் பஸ்நாயக்கவும், நிதியமைச்சர் பஸ்நாயக்கவும் கூறிய கருத்துக்கள் முரண்பாடாக அமைந்திருந்தன. 

இந்தநிலையில் இவ்வாறான தகவல்கள் ஊடகங்களுக்கு செல்லாத வகையில் அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதன் அடிப்படையி;ல் பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது.

இதன்படி அரசாங்க அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக கருத்துக் கூறுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.


New government which promised to implement complete media freedom in SriLanka currently impose restrictions on sending information to media organization, Local English newspaper reports.

The Defence Secretary Bassnayake and the Minister of Finance Ravi  makes  statements on the armory seized at Galle and cash deposited by the former defence secretary Gotabaya Rajapaksa. 

To avoid such situation in near future the ministry of public administration sent circulars towards ministries on ordering to prevent from making official statements to media, English newspaper reports.



« PREV
NEXT »

No comments