Latest News

October 29, 2014

Lyca உரிமையாளர் மற்றும் கத்தி பட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் இலங்கை புலனாய்வுத்துறையால் கட்டுநாயக்காவில் கைது-பின் விடுவிப்பு
by admin - 0

லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளர் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கத்தி படம் வெற்றிபெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலைதீவுகள் சென்று தங்கியுள்ளார்கள். பின்னர் மாலை தீவில் இருந்து இன்று காலை(29) லண்டன் திரும்ப திட்டமிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது.இந்நிலையில் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களின் பாஸ்போர்ட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரன் மற்றும் பிரேமிடம் விசாரணை நடத்தவேண்டும் எனவும், அவரை விமானத்தை விட்டு கிழே இறங்கி வருமாறும் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள்.தம்மை புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளம் காட்டிய நபர்களே இவ்விருவரையும் விமானத்தில் இருந்து இறங்கி உள்ளே கொண்டு சென்றுள்ளார்கள். 30க்கும் மேற்பட்ட கத்தி திரைப்பட குழுவினர் அந்த விமானத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் எவ்வளவோ தடுக்க முற்பட்டும் அவர்களால் எதனையும்செய்யமுடியவில்லை.இந்நிலையில் சுபாஷ்கரன் கைதுசெய்யப்பட்டது ஏன் என்று தெரியாத நிலை காணப்படுகிறது. இச்செய்தியை கொழும்பில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உறுதிசெய்யமுடியாத நிலையும் காணப்படுகிறது.

இந்த கைது என்ன நோக்கம் மற்றும் இதன்
உள்நோக்கங்கள்  தெரியவரவில்லை. இந்த கைது இடம்பெற்ற நேரங்கள் லைக்கா இலங்கை அரசின் கைகூலி ஆதலால் அவர்கள் தயாரிக்கும் படத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடக்கும் காலம். இந்த கைது ??

1. இலங்கை அரசுடன் லைக்கா நடத்தும் நடகமாக இருக்கலாம் 

2. மகிந்த மற்றும் கோத்தபாயவுக்கும் உள்ள முரன்பாட்டில் இவர் சிக்கி இருக்கலாம். புலனாய்வு படை கோத்தபாயவின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

3. உண்மையில் லைக்காவுக்கும் மகிந்தவுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கலாம் -இக்கருத்து உண்மை என்றால் லைக்கா உரிமையாளரை எப்பவோ கைது செய்திருப்பார்கள்.

4.தமிழ்நாட்டு உணர்வாளர்களை குழப்புவதற்காக கைது செய்யப்பட்ட மாணவர்களை மற்றும் மாணவர் போராட்டங்களை மங்க செய்யும் ஒரு செயற்பாடக கூட இருக்கலாம்.

இந்த கைது ஒரு நாடகமாயின் மிகப்பெரும் சதி வலை ஈழத்தமிழர்களுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டு தமிழர்களையும் சூழ்ந்துள்ளது என்பது உண்மையாகும்.



சற்று முன் கிடைத்த தகவலுக்கு அமைய சுபாஷ்கரனை விடுதலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் தற்போது விடுதி ஒன்றில் தங்கி பின்னர் நாளை லண்டன் நோக்கிப் புறப்பட தயாராக உள்ளதாக கொழும்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 



« PREV
NEXT »

No comments