Latest News

September 30, 2014

ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் சர்வதேச சதி
by Unknown - 0

"ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் சர்வதேச சதி நடந்துள்ளது," என அக்கட்சி கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டினார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக கூறி மதுரையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பேசியதாவது:

சுப்பிரமணியசாமியால் கற்பனையால் தொடரப்பட்ட வழக்கில் ஜெ., கைது செய்யப்பட்டு தற்போது வெள்ளை சேலை உடுத்தி சிறையில் உள்ளார் என்ற தகவல், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மனதை புண்படுத்தியுள்ளது.தீர்ப்பை நீதிபதி படித்தபோது, "நீங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்," என ஜெ.,வை பார்த்து கூறியுள்ளார். எதை வைத்து இப்படி கூறினார். வதோதரா, ராஜஸ்தான், உ.பி.,யில் நடந்த இடைத்தேர்தல்களில் மக்கள் நம்பிக்கையை இழந்தவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஜெ., கைது பின்னணியில் சர்வதேச சதி நடந்துள்ளது. தமிழ் இனத்தை திட்டமிட்டு அழித்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என முதல்வராக இருந்த ஜெ., தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், ஐ.நா.வில் சிலர் ராஜபக்சேவுடன் கை குலுக்குகினர்.பெங்களூரு கோர்ட்டில் தீர்ப்பு படிப்பதற்கு முன்பே கோபாலபுரத்திற்கு ஜெ.,வுக்கு கொடுக்க இருந்த தண்டனை விவரம் எப்படி கசிந்தது. காவிரி பிரச்னை உள்ளிட்ட பல தமிழக உரிமைகளை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. இனப்பகையாலும் இந்த சதி திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம். மூன்றடுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் சிறைக்குள் ஜெ.,விற்கு கொடுமை நடக்கிறதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். எப்படி இருந்தாலும் வழக்கை சட்டப்படி சந்தித்து ஜெ., விடுதலையாவார்.அநீதிக்காக கண்ணகி நீதி கேட்ட இந்த வைகை கரையில், நாங்களும் நீதி கேட்டுள்ளோம். விரைவில் வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுக்கும் நேரம் வரும். காஞ்சிபுரம், காரியாபட்டியில் பஸ்களை எரித்தவர்கள் அ.தி.மு.க.,வினர் அல்ல. அவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள், என்றார்.

« PREV
NEXT »

No comments