Latest News

September 30, 2014

கண்ணீரும் கம்பலையுமாக பதவி ஏற்றார் பன்னீர்
by Unknown - 0

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக இன்று கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நத்தம் விஸ்வநாதன், மோகன், வளர்மதி,எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி, சம்பத், செல்லூராஜ், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட பல எம்.எல்.ஏ.க்களும் இன்று மீண்டும் அமைச்சர்களாக கண்ணீர் மல்க கதறி அழுதபடி பதவியேற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை தமிழக முதல்வராக பதவியேற்ற  ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பெங்களூர் சென்று காலை சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  
« PREV
NEXT »

No comments