Latest News

October 28, 2013

யாழ் ஊடகவியலாளர்களிற்கு இராணுவம் அச்சுறுத்தல் படங்கள் உள்ளே
by admin - 0

யாழ் வலிகாமம் வடக்கு கட்டுவன் பகுதியில் இராணுவத்தால் வீடுகள் இடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் செய்தி சேரிக்கச் சென்ற ஐந்து ஊடகவியலர்ளர்கள்; இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சித்துள்ளது



வலி வடக்கு இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியான கட்டுவனில் தங்களுக்குச் சொந்தமான வீடுகள் உடைக்கப்கப்படுவது தொடர்பில் அப்பகுதி மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தகவல் வழங்கியதையடுத்து இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், கஜதீபன் ஆகியேர் கட்டுவன் பகுதிக்கு சென்று இராணுவத்தால் வீடுகள் உடைக்;கும் சம்பவங்கள் தொடர்பில் நேரில் பார்வையிட்டனர்.



கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இராணுவத்தால் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் வீடுகள் உடைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் செய்தி சேகரிக்கச்சென்ற யாழில் உள்ள வலம்புரி அலுவலகச்செய்தியாளர் எஸ். ராஜேஸ்கரன், தினக்குரல் அலுவலகச் செய்தியாளர் எஸ். நிதர்சன், சத்தி ரீவியைச் சேர்ந்த பிராந்தியச் செய்தியாளர் வி. கஜீபன், தமிழ்மிரர் பிராந்தியச் செய்தியாளர் எஸ்.கஜேந்திரபிரசாத் மற்றும் உதயனின் புகைப்பட செய்தியாளர் எஸ். தர்சன் ஆகிய ஊடகவியலாளர்களும் சென்றிருந்தனர்

இவர்களிடம் இருந்த புகைப்படக்கருவிகள் மற்றும் ஒளிப்பதிவு  கமராவினை பறிமுதல் செய்த இராணுவத்தினர் அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், ஒலிப்பதிவுகள் யாவும் அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் அவர்களைத் தாக்கவும் முயற்சித்துள்ளனர்.



புகைப்படக்கருவிகளை கொடுக்க மறுத்த ஊடகவியலாளர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்தெடுத்த இராணுவத்தினர் அதிலிருந்த வீடுகள் உடைக்கும் காட்சிகளை அழித்துள்ளனர்.



இங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காணொளிகள் எக்காரணம் கொண்டும் வெளிவரக்கூடாது என்று இவ்வாறு வந்தால் இராணுவ அதிகாரப் பலத்தை தாங்கள் பிரயோகிக்கவேண்டும் என்று இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



தயவு செய்து  அனைத்து  தமிழ் ஊடகங்களும் இந்த செய்தியை பிரசுரித்து இலங்கை இராணுவத்தின் அடக்குமுறையை வெளிபடுத்துங்கள்
« PREV
NEXT »

No comments