Latest News

October 28, 2013

புலம்பெயர் தேசங்களில் தமிழ் செல்பேசி நிறுவனத்தைக் குறிவைக்கும் கே.பி குழு!
by admin - 0

புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் தமிழர்களைக் கண்காணிப்பதற்கும் தாயகத்தில் உள்ள உறவுகளுடன் அவர்கள் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கும் ஏதுவாக ஐரோப்பாவில் இயங்கும் முன்னணி தமிழ் செல்பேசி நிறுவனம் ஒன்றைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் கே.பி குழுவினரை சிங்களம் களமிறக்கிவிட்டுள்ளது.
ஐரோப்பாவில் இயங்கும் குறிப்பிட்ட செல்பேசி நிறுவனத்தின் உரிமையாளர்களை அணுகியிருக்கும் கே.பியின் கையாட்கள் அந் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செல்பேசி அட்டைகளைப் பயன்படுத்தி தாயகத்தில் உள்ள தமது உறவுகளுடனான தொலைபேசி உரையாடல்களை பெருமளவான புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் மேற்கொண்டு வரும் நிலையில் அந் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதன் ஊடாக அதன் வசமுள்ள புலம்பெயர்வாழ் தமிழர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெறுவதற்கும் அவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கும் சிங்களம் திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகின்றது.
அத்துடன் வெளிநாடுகளில் கே.பியின் பினாமிகளின் வசமும் ராஜபக்ச சகோதரர்களின் பினாமிகளின் வசமும் இருக்கும் பணத்தை சட்டபூர்வமான முறையில் கொழும்பிற்கு எடுப்பதற்கான பணப் பரிவர்த்தனைப் பாதை ஒன்றை திறப்பதற்கும் இந் நிறுவனத்தை சிங்களம் பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான இடைத்தரகர்களாக கடந்த காலங்களில் யேர்மனி கனடா பிரித்தானியா பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு சென்று கே.பியை சந்தித்த ‘மெத்தப்படித்த கனவான்கள்’ சிலரும் உள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
« PREV
NEXT »

No comments