Latest News

September 18, 2013

உயிருக்கு அச்றுத்தல் - நாட்டை விட்டு சண்டே லீடர் பத்திரிகையின் இணை ஆசிரியர் வெளியேற்றம்
by admin - 0

கொலைக்குழு ஒன்றின் கொலை அச்சுறுத்தலில் இருந்து உயிர் தப்பிய சண்டே லீடர் பத்திரிகையின் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மையில் அபேவிக்ரம, இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். அவரது கணவரும் சண்டே லீடர் பத்திரிகையின் பொருளாதார செய்தியாளருமான ரொமேஷ் அபேவிக்ரம, 12 வயதான மகள் ஆகியோருடன் மந்தனா இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார். கடந்த மாதம் 24 ஆம் திகதி சம்பந்தப்பட்ட
ஊடகடவியலாளரின் வீட்டுக்குள் புகுந்த
ஆயுதக்குழு சுமார் மூன்று மணிநேரம்
வீட்டுக்குள் தேடுதல் நடத்தியது. வீட்டுக்குள் சந்தேகத்திற்கிடமான சம்பவம்
நடப்பதை உணர்ந்து கொண்ட மந்தனாவின் கணவர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து ஏற்பட் சம்பவத்தில் ஒரு சந்தேக நபர் பொலிஸாரினால்
சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 4 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். ஆயுதக்குழு ஊடகவியலாளரின் வீட்டில்
கொள்ளையிடவே அங்கு சென்றிருந்ததாக
பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் ஊடக
அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும்
அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று மணிநேரம் வீட்டுக்குள் இருந்த
சந்தேக நபர்கள் ஏதேனும்
ஆவணங்களை தேடியிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 8 ஆம் திகதி மந்தனாவின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத சிலர் அங்கிருந்த
கணனியை எடுத்துச் சென்றனர். அவரது வீட்டுக்கு இரண்டாவது தடவையாக
கொள்ளையர்கள் சென்றது பணம் மற்றும்
தங்கத்தை கொள்ளையிட்டுச் செல்ல அல்ல எனவும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் மோசடியான கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ள ஆவணங்களை எடுத்துச் செல்ல சென்றிருந்தனர் என்றும்
சமகி அமைப்பு வெளியிட்டிருந்த ஊடக
அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மந்தனா இஸ்மையிலின் வீட்டுக்குள்
இனந்தெரியாதவர்கள் புகுந்தமை பற்றிய
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து கடந்த 3 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்பியிருந்தார். இந்திய கிறீஸ் நிறுவனம் ஒன்றுக்கும் ஆளும்
கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவருக்கும் இடையில் நடந்த மோசடியான கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணங்களை எடுத்துச் செல்லவே சந்தேகநபர்கள் ஊடகவியலாளரின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர் என்றும் ரணில்
விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில்
குறைந்தது அடையாளம் காணும்
அணி வகுப்புக் கூட நடத்தப்படவில்லை என ரணில் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், மேற்படி சம்பவத்தை கொள்ளை சம்பவமாக சித்தரிக்க முற்சித்து வரும்
பாதுகாப்பு தரப்பினர், தனது வீட்டுக்குள்
புகுந்த ஆயுதக்குழு தொடர்பில் மௌனம்
காத்து வருவதாகவும் சம்பவம் குறித்து சரியான விசாரணைகள்
நடத்தப்படவில்லை எனவும் மந்தனா இஸ்மையில் நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் தெரிவித்திருந்தார். இதனிடையே 2013 ஜூன் 20 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக அகதிகள் தினம் தொடர்பில் அறக்கை ஒன்றை வெளியிட்டிருந்த எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் சங்கம் , 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கையை சேர்ந்த 52 ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு தேடி நாட்டை விட்டு வெளியேறிய
கூறியிருந்தது.
« PREV
NEXT »

No comments