Latest News

September 18, 2013

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது கே.பி
by admin - 0

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழர்கள் பிரச்சினையில்
ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று கே.பி நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார். அவர் மேலும்
தெரிவிக்கையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான விஸ்வநாதன் ருத்ரகுமாரன்
தலைமையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இயங்கி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நான் ஆரம்பித்தேன். ஆனால் தற்போது அந்த
அமைப்பின் நோக்கங்கள்
மாற்றமடைந்துள்ளதுடன்
அது வேறு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப
செயற்பட்டு வருகிறது. புலம்பெயர் தமிழர்கள் அனைவரும்
அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களில்
சம்பந்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் எனது பணிகளுக்கு ஆதரவு வழங்கி வருவதுட போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களுக்கு உதவியளித்து வருகின்ற அதேவேளை சர்வதேச சமூகம் இலங்கையின் பிரச்சினைகளில் தலையிடக் கூடாது. இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையின் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைத்
தேர்தலை பயன்படுத்தி நாட்டை பிளவுப்படுத்த முயற்சித்து வருகிறது. இதனால் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில்
வடக்கு மாகாண மக்கள் கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது என்றார்.
« PREV
NEXT »

No comments