Latest News

March 25, 2011

விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட்கட் கீகள்
by admin - 0

விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்
ALT+1: 50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர
ALT+2: ஸூம் 100 சதவிகிதமாக்க
ALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்க
ALT+ Enter: வீடியோ காட்சியை முழுத்திரை யில் காண
ALT+F: மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல
ALT+T: டூல்ஸ் மெனு செல்ல
ALT+P: பிளே மெனு செல்ல
ALT+F4: மீடியா பிளேயரை மூடிவிட
CTRL+1: மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர
CTRL+2: மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர
CTRL+B: இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட
CTRL+F: வரிசையில் அடுத்த பைலை இயக்க
CTRL+E: சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள
CTRL+P: இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க
CTRL+T: இயங்கியதை மீண்டும் இயக்க
CTRL+SHIFT+B: ஒரு பைலை ரீவைண்ட் செய்திட
CTRL+SHIFT+F: ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட
CTRL+SHIFT+S: வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+G: வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+N: சரியான வேகத்தில் ஆடியோ/வீடியோ இயக்க
F8: மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த
F9: மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட
F10: மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க
Enter / Space bar: ஒரு பைலை இயக்க
Read More

விண்டோஸ் 7 கிராஷ்!
by admin - 0

விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் பல பயன்களினால், பெரும்பாலானவர்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாய்க் கம்ப்யூட்டர்கள் வாங்கும்போது, மைக்ரோசாப்ட் மற்ற நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டே கிடைக்கிறது.
பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.
கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.
இமேஜ் உருவாக்குதல்: விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும். இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.
Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும். இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்; சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.
இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும். இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது.
நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.
பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும். பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும். எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது.
இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு Start பட்டனில் கிளிக் செய்து, நீள் கட்டத்தில் system repair என டைப் செய்து, என்டர் தட்டவும். இதனை ஒரு சிடி அல்லது டிவிடியில் சேவ் செய்திட வேண்டும். எனவே காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை, அதன் ட்ரைவில் செருகிப் பின்னர் Create Disc என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு சிறிய இமேஜாகத்தான் இருக்கும் என்பதால், இதற்கு ஒரு சிடியே போதும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிடியை, பத்திரமான ஓர் இடத்தில், தேடினால் உடனே எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வைத்திட வேண்டும்.
மீட்புப் பணி: விண்டோஸ் 7 சிஸ்டம் எப்போது கிராஷ் ஆகிறதோ, அப்போது இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் System Repair டிஸ்க்கைப் பயன்படுத்தி, சிஸ்டத்தினை இயக்கவும். இயங்கி, பின்னர் நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Restore Your Computer Using a System Image என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு உள்ளது என பிரவுஸ் செய்து என்டர் தட்டினால், மீட்சிப் பணி தொடங்கும். இந்த வேலையும் சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். ஆனால் இமேஜ் உருவாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நேரம் எடுக்காது. சிஸ்டம் இமேஜ் உருவாக்கிய போது கம்ப்யூட்ட்டர் எந்த நிலையில் இருந்ததோ, அந்நிலைக்குக் கம்ப்யூட்டர் மீண்டும் கொண்டு வரப்படும்.
பொதுவாக, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல வகையிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும். எனவே அது கிராஷ் ஆவது என்பது அரிதாக நடக்கும் ஒரு செயலாகும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் மேலே சொன்ன இரண்டையும் மேற்கொள்வது நல்லதுதானே.
Read More

March 19, 2011

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் (இலைவழி நுண்ணூட்ட உரம்)
by admin - 0

வாழைக்கு நுண்ணூட்டத்தின் அவசியம்: வாழையில் சமச்சீராக உரமிடுவது அதிகமான விளைச்சலுக்கும், தரத்திற்கும், நோய் எதிர்ப்பு திறனுக்கும் மிக முக்கியமானதாகும். மிகக் குறைவான விவசாயிகளே நுண்ணூட்டச் சத்தினை தங்கள் தோட்டங்களில் இடுகிறார்கள். நிலங்களில் குறைவான அளவில் அங்ககச் சத்துக்கள் இருப்பது, அதிக அளவிற்கு பேரூட்ட ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது, உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிடுவது போன்ற காரணங்களினால் தற்போது நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடுகள் விவசாயத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
மண்வளம் பாதிக்கப்படுவது, போதிய வேர் வளர்ச்சியின்மை, பாஸ்பரஸ் உரங்களை அதிகமாக பயன்படுத்துவது போன்ற காரணங் களினால் நுண்ணூட்டச் சத்தை மண்ணில் இட்டு நிவர்த்தி செய்வது கடினமானதாகும். மண்ணில் இடப்பட்ட நுண்ணூட்டச் சத்தில் 3 முதல் 5 சதவீதம் மட்டுமே பயிர்களால் கிரகிக்கப்படுகிறது. எனவே விளைச்சல் மற்றும் தரத்தை அதிகப் படுத்துவதற்காக நுண்ணூட்டச் சத்துக்களை இலைவழி தெளித்தல் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தில் மிக முக்கியமான அங்கமாகும்.
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல்: வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலானது பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியில் உருவான தொழில்நுட்பமாகும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தயாரிக்கப்படுகின்றது.
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தெளிப்பதால் உண்டாகும் பயன்கள்: * நுண்ணூட்டக் குறைபாடு உடனே நிவர்த்தியாகிறது. * உரத்தின் பயன்பாடு குறைகிறது. * பயிரின் வளர்ச்சி துரிதப் படுத்தப்படுகிறது. * நல்ல தரமான பெரிய வாழை குலை கிடைக்கிறது.
கலவையில் உள்ள முக்கிய நுண்ணூட்டங்கள்: துத்தநாகம்-3%, போரான்-1.5%, மாங்கனீஸ்-1%, இரும்பு-1.5%.
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் உபயோகிக்கும் முறை: * வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் 50 கிராம், ஒரு சாம்பு பாக்கெட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். *வாழை நட்ட 5வது, 6வது, 7வது, 8வது, 9வது மற்றும் 10வது மாதங்களில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை தெளிக்க வேண்டும்.
* வாழை குலை தள்ளிய பின் முதல் மற்றும் இரண்டாவது மாதத்திலும் குலைகளின் மேல் தெளிக்க வேண்டும். * இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை பூச்சிக் கொல்லி மருந்துடன் சேர்த்தும் தெளிக்கலாம். தாமிரம் கலந்த பூஞ்சாணக் கொல்லி மருந்துடன் மட்டும் கலந்து தெளிக்கக் கூடாது.
* வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை தயாரித்ததுடன் தெளிக்க வேண்டும். * இந்த நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4மணி முதல் 6.30 மணி வரையிலும் தெளிக்க சிறந்தது. * இலையின் அடிப்பகுதி முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். குலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
Read More

March 17, 2011

ஜப்பான் நிலநடுக்கத்தால் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு!
by admin - 0



ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்` என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த 11ம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி ஏற்பட்டது. அந்நாட்டின் மூன்று மாகாணங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. மேலும், இரண்டு மாகாணங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டன. ஜப்பான் பல தீவுக் கூட்டங்களால் ஆன நாடு. எனினும், ஹொக்கைடோ, ஹோன்ஷூ, ஷிகோக்கு, கியூஷூ என்ற நான்கு பெரிய தீவுகள் தான் முக்கியமானவை. இவற்றிலும், ஹோன்ஷூ தான் மிகப் பெரியது. இதில் தான், தலைநகர் டோக்கியோ உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹோன்ஷூ தீவு, 8 அடி நகர்ந்துள்ளதாகவும், பூமியின் அச்சு 17 செ.மீ., நகர்ந்துள்ளதாகவும் அமெரிக்க நிலவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் மேலும் கூறியதாவது:தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பூமியின் எடையில் சிறிது மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது சுற்றும் வேகம் சிறிது அதிகரித்துள்ளது. இதனால், ஒரு நாளில் மொத்த வினாடிகளில் 1.8 மைக்ரோ வினாடிகள் குறையும். ஒரு நாள் என்பது 86,400 வினாடிகள் கொண்டது. இந்த மாற்றத்தால், பாதிப்பு எதுவும் ஏற்படாது. இதுபோன்ற அச்சு மாற்றங்கள் பூமியின் வரலாற்றில் சகஜம் தான். கடந்த 2010ல் சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தால், ஒரு நாளில் 1.26 மைக்ரோ வினாடிகளும், 2004ல் சுமத்ராவில் நிகழ்ந்த 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் 6.8 மைக்ரோ வினாடிகளும் குறைந்துள்ளன.இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்தனர்.
Read More

March 15, 2011

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்-விக்கிலீக்ஸ் மர்மங்கள்! தோடரும் பாகம் 2
by admin - 0




பகுதி 2

ஜூலியன் பால் அசாங் (julian paul asang
se), வயது 41, பிறப்பால் ஆஸ்திரேலியர், ஹைடெக் நாடோடி. பூமிப்பந்தில் இருக்கும் பாதி நாடுகளால் ரகசியமாகத் தேடப்படும் நபர். இன்றையத் தேதியில் ஜூலியனைத் தவிர யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி, ‘ஜுலியன் இப்போது எங்கிருக்கிறார்?’தற்பொழுது லண்டன் சிறை இவர் நாடுகடத்தப்படலாம்??????? என்பது தான். அந்த அளவுக்கு தான் இருக்கும் இடத்தை ரகசியமாக அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மாயாவி. தன் வாழ்நாளின் அனேக பொழுதுகளை விமான நிலையத்தில் பறக்க விடும் இவரின் பயணங்கள் அனைத்துமே ஒரே இலக்கை நோக்கி, அது ‘விக்கிலீக்ஸ்’.
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூளை. தளத்தின் முகவரிக்குச் சொந்தக்காரர். பிறந்தது ஆஸ்திரேலியாவில், இரண்டு திருமணங்கள் செய்தும் தனியாக வாழும் தாய், மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து, விவாகரத்து செய்து தன் மகனையும், மனைவியையும் பிரிந்து வாழ்தல் என்று நிம்மதியில்லாத சொந்த வாழ்க்கை, இவை அனைத்தையும் தாண்டிய ஒரு உத்வேகம் ஜூலியனிடம் இருந்தது. அது கணினியும், கணினி சார்ந்த வாழ்க்கையும். இயற்பியலும், கணிதமும் கற்றாலும், கணினி மீதான காதல் 16 வயதிலேயே நிரல்கள் எழுதும் திற்மையினைக் கைவரச்செய்தது.

16 வயது ரொம்ப ஆர்வக்கோளாறான வயதென்றாலும், ஜூலியனின் ஆர்வம் கணினியின் பால் சார்ந்திருந்ததால், 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் (nortel) தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை (server) தன் வசப்படுத்தி, அந்த வலையமைப்பின் நிர்வாகியிடமே “It’s been nice playing with your system. We didn’t do any damage and we even improved a few things. Please don’t call the Australian Federal Police” என்று கும்மியடித்துக் கலாய்க்கும் அளவுக்கு ஹேக்கிங் கில்லாடி. ஹேக்கிங் என்பது வலையமைப்பின் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி (exploiting the vulnerabilities) திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது, விரைவில் தனித் தொடரில் ஹேக்கிங் குறித்துப் பார்ப்போம் :D .
இப்படி தன் திறமைகளை வைத்துச் சேட்டைகள் செய்து கொண்டிருந்த ஜூலியனைத் தேடி விரைவிலேயே ‘ஜூலியன், யூ ர் அண்டர் அரெஸ்ட், நான் உங்களை கைது செய்றேன்’ என்றபடி ஒரு ஆஸ்திரேலிய மேஜர் சுந்தர்ராஜன் இயற்கையாக வருகை தந்தார். சுமார் 31 ஹேக்கிங் குற்றங்கள் சுமத்தப்பட்டு அனைத்துமே ‘சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்’ என்று நமக்கு மிகப் பழக்கமான வசனத்துடன் முடித்து வைக்கப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் ஜூலியனுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இப்படி அந்த காலத்திலேயே ஜூலியன் வசப்பட்ட வலையமைப்புகளில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமும் அடங்கும். ‘வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்’, இவை ஜூலியனின் உபதேசங்கள்.
விவாகரத்தின் போது அரசுத் துறைகளிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் மிகப்பெரும் பொது நிறுவனங்கள், அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் சென்றதில் கிடைத்தத் தகவல்கள் மூலம் அவர்களின் போலியான கோர முகங்களைக் கண்ட ஜூலியனுக்குள் சில மாற்றங்கள் உண்டாயின. இந்த சமூகம் எப்படி ஒரு போலியான கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு தனிமனிதனையும் அலைக்கழிக்கிறது என்பதனைக் கண்ட ஜூலியன் ‘ஓ..ஒரு தெய்வம்… படி தாண்டி வருதே..’ என்ற பாடல் முழங்க ஆஸ்திரெலியாவினை விட்டு வெளியேறி, தன் சிந்தனைகளை ஒத்த நண்பர்களைத் தேடிய பயணத்தை தொடங்கினார். ஊடக போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன் அதற்குக் கொடுத்த செயல் வடிவம் தான் ‘விக்கிலீக்ஸ்’.

ஜூலியனின் சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர், அதில் பலநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அடக்கம். விக்கிலீக்ஸ் போன்ற செயல்வடிவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது ஜூலியனுக்கு தெரிந்தே இருந்தது.இது நாள் விக்கிலீக்ஸ் தளத்திற்கென முழுநேரம் பணிபுரிவது ஐந்து நபர்கள் மட்டுமே என்பதையும், உலகெங்கும் ஆயிரத்திற்கும் அதிகமானார் தன்னார்வத் தொண்டர்களாக ஊதியமின்றி பணிபுரிகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். தனது வாடிக்கையாளர் விவரங்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த PRQ என்ற நிறுவனத்திடம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பதிவு செய்யப் பரிந்த்துரைத்த சட்ட ஆலோசகர்களின் சொல்படி www.wikileaks.org என்ற இணையதள முகவரி, 2006 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூலியனின் பெயரில் பதிவுசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஜூலியனுக்கு வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக
மாறிவிட்டது. பதிவு செய்யப்பட்டது ஸ்வீடனின் PRQ நிறுவனமாக இருந்தாலும் தள முகவரிக்கு ஏறக்குறைய 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. எல்லா நாடுகளிலுமே தகவல் பரவலுக்கு சட்டப்படிப் பாதுகாப்பு வழங்கும் நாடுகள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வழங்கியில் இருந்து தளம் செயல்படும், மேலும் எந்த நேரத்திலும் எந்த நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் ரகசியத் தகவல்களை நீக்குவதில்லை என்ற ஜூலியனின் கொள்கை வசதிக்காகவும் இந்த ஏற்பாடு. ஒரு நாட்டில் வழங்கியை முடக்கினால் வேறொரு நாட்டில் இருந்து தளம் தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. எல்லாம் தயார், தங்கள் தளத்தில் அதிரடியாக வெளியிடுவதற்கு ரகசியக் கோப்புகள் வேண்டுமே எப்படித் திரட்டுவது?. ஜூலியனிடம் ஒரு திட்டம் இருந்தது !.
part1




Read More

அணுக் கதிர்வீச்சுத் தாக்கம் தொடர்பில் இலங்கை வான்பரப்பிலும் கண்காணிப்பு
by admin - 0

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து இடம்பெற்ற அணுஉலை வெடிப்புகள் காரணமாக வெளியாகும் கதிர்வீச்சு இலங்கை வான்பரப்பிலும் தாக்கமேற்படுத்தலாம் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன் ஒரு கட்டமாக நாளை முதல் இலங்கை வான்பரப்பில் அணுக்கதிர்வீச்சு குறித்த கண்காணிப்புகளை மேற்கொள்ள இலங்கை அணு சக்தி முகவரகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கின்றது.

இலங்கையின் வான் பரப்பில் கதிர்வீச்சுப் பொருட்கள் ஏதும் தென்படுகின்றதா என்று கண்காணிப்பதே அதன் நோக்கம் என்று மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானிய அணு உலைக் கசிவு காரணமாக இலங்கைக்குப் பாதிப்புகள் இல்லையென்ற போதிலும் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்று இலங்கை அணுசக்தி முகவரகத்தின் தலைவர் கலாநிதி விமலதர்ம அபேவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்

Tsunami - The Aftermath
Read More

March 14, 2011

புகைக்கும் அழகியின் முட்டாள்தனம்
by admin - 2


புகைத்தல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.


Wild Sight

மெல்ல மெல்ல உயிரைக் கொல்லும்.


ஆனால் ஒரு அழகான யுவதி உடனடியாக இறக்கின்றமைக்காக புகைப் பிடிக்கின்றார் போலும்?


படங்களைப் பாருங்கள்.


புரிந்து கொள்வீர்கள்.

Read More

அறிமுகமானது ஐ பேட் 2
by admin - 0

ஐபேட் டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தி, இந்த சந்தையில் முதலாவதாக நுழைந்து பெரிய அளவில் வர்த்தகத்தினை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், சென்ற மார்ச் 2ல் தன்னுடைய ஐபேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பான ஐபேட்-2 டேப்ளட் பிசியை வெளியிட்டது. முந்தையதைக் காட்டிலும் ஸ்லிம்மாக, குறைவான எடையில், வேகமான இயக்கத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விலை சிறிது கூட குறைக்கப் படவில்லை. வை-பி திறன் கொண்ட 16 ஜிபி மாடல், 499 டாலருக்கும், 64 ஜிபி 699 டாலருக்கும், 3ஜி ஐபேட் 629 மற்றும் 829 டாலருக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ல் அமெரிக்காவில் வெளியான இந்த ஐபேட் மற்ற ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 25ல் வெளியாகிறது.
இதன் சிறப்பம்சங்கள் என அறிவிக்கப்பட்டவற்றை இங்கு காணலாம்.

1. ஆப்பிள் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட A5 என அழைக்கப் பட்ட புதிய டூயல் கோர் ப்ராசசர் இதில் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இது இயக்க வேகத்தினை இரு மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரு மடங்கு பணிகளை மேற்கொள்ளலாம். இணையத்தில் உலா வரும் போதும், திரைப்படங்களைப் பார்க்கும் போதும், ஒரு அப்ளிகேஷ னிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் போதும், இந்த வித்தியாசத்தினை உணரலாம். பல புரோகிராம்களின் இயக்கம் ஒரே நேரத்தில் மேற்கொள்கையில் இந்த வேகம் புலப்படுகிறது. கிராபிக்ஸ் ப்ராசசர் வேகம் ஒன்பது மடங்கு கூடுதலாக மேற்கொள்ளப்படுகிறது. கேம்ஸ் விளையாடுகையில் இதனை உணரலாம். அல்லது போட்டோ லைப்ரேரி மற்றும் வீடியோ எடிட்டிங் செயல்பாடுகளில் கிராபிக்ஸ் வேகத்தை அறியலாம்.

2. முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் என இரண்டு கேமராக்கள் இதில் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுக்கலாம். வீடியோ கான்பரன்சிங் அழைப்புகளை மிக எளிதாக இந்த கேமராக்களின் மூலம் மேற்கொள்ளலாம். குறிப்பாக பேஸ் டைம் (Face Time) வீடீயோ அழைப்பு மற்றும் அரட்டைக்கு இது உதவுகிறது.

3. முந்தைய ஐபேடைக் காட்டிலும் 33% ஸ்லிம்மாகவும் அழகாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐபேட் 13.4 மிமீ தடிமன் கொண்டிருந்தது. இது 8.8. மிமீ கொண்டுள்ளது. ஐபோன்4 9.3 மிமீ அளவில் தடிமன் கொண்டது என்பது நினைவிற்குரியது. எடை 1.5 பவுண்டுக்குப் பதிலாக 1. 3 பவுண்டு உள்ளது. முதல் முறையாக கருப்பு வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உள்ளது. இதன் உயரம் 9.5 அங்குலம்; அகலம் 7.3; தடிமன் 0.34 அங்குலம்.

4. இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை 4.3 பதிப்பிற்கு உயர்த்துகிறது. இது அனைத்து ஐபேட் சாதனங்களிலும் பயன்படுத்தப்படலாம். மேலும் சில ஐபாட் சாதனங்களிலும், சில ஐபோன்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த பதிப்பில், மேம்படுத்தப்பட்ட சபாரி பிரவுசர் தரப்படுகிறது. இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்க 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரோகிராம்கள் உள்ளன.

5. ஏர் பிரிண்ட் எனப்படும் தொழில் நுட்பம் மூலம், எந்த வித வயர் இணைப்பு இல்லாமல் டாகுமெண்ட்களையும், போட்டோக்களையும், இணையப் பக்கங்களையும் அச்செடுக்கலாம். வை-பி இருந்தால் போதும். அதனையும் தானே உணர்ந்து அறிவிக்கிறது.

6.ஒரு தொழில் நுட்பம் எப்போது அதிகப் பயன் தருவதாக அமைகிறது என்றால், பயன்படுத்துகையில் அது ஒரு தொழில் நுட்பமாக அறியப்படக் கூடாது. ஐபேட் அந்த சிறப்பைப் பெற்றுள்ளது. விரல்களினால் மெதுவாகத் தட்டியே, இணையத்தை உலா வரலாம்; இமெயில்களைப் படித்து பதில் தரலாம்; போட்டோக்களை விரித்துப் பார்த்து எடிட் செய்திடலாம். நூல்களின் பக்கங்களைப் புரட்டிப் படிக்கலாம். நம் ஸ்கிரீன் தொடுதல்கள் இப்படி பல செயல்களாக மாறுகையில் ஏதோ மந்திரக் கோல்களினால் செயல்கள் நடைபெறுவதைப் போல் உள்ளது.

7. இதன் பேக்லைட் எல்.இ.டி. டிஸ்பிளே திரை 9.7 அங்குல அளவில் உள்ளது. அதிக ரெசல்யூசன் கொண்ட போட்டோக்கள், திரைப்படங்கள், விளையாட்டுக்கள் உயிர்த்துடிப்புடன் நம் முன்னே உலா வருகின்றன. நாம் எப்படி இதனைப் பிடித்தாலும், அதற்கேற்ப டிஸ்பிளே மாறிக் கொள்கிறது. இந்த காட்சி 178 டிகிரி கோணத்தில் அகலமாக அழகாக காட்சி அளிக்கிறது.

8. பத்து மணி நேரம் திறன் தரும் பேட்டரி, முந்தைய ஐபேடில் உள்ளது போலத் தரப்பட்டுள்ளது. ஒரு மாதம் வரை மின் சக்தியைத் தேக்கி வைக்கிறது. 10 மணி நேரம் கடல் தாண்டும் விமானப் பயணங்களில் இது கை கொடுக்கிறது.

9. இதன் மேல்கவர் புதுமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதனத்துடன் இணைந்தே உள்ளது. ஸ்கிரீனை மட்டும் மூடுகிறது. சாதனத்தை மூடினால், இயக்கம் தானாக நின்றுவிடுகிறது. திறந்தால் உடனே இயங்கத் தொடங்கிவிடுகிறது. கவர் மைக்ரோ பைபர் துணியால் ஆனது. இதனைக் கொண்டு ஸ்கிரீனைச் சுத்தம் செய்திட முடியும். மேலாக உள்ள கவர் பாலியூரிதின் அல்லது லெதர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிமுகப்படுத்திய ஆப்பிள் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் கூறுகையில், இந்த 2011 ஆம் ஆண்டு புதிய ஐபேட் 2 சாதனத்தின் ஆண்டாக இருக்கும். இது அடுத்த பெர்சனல் கம்ப்யூட்டர் என ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளர்கள் கருதுவதாகவும் அது தவறு எனவும் கூறினார். ஐபேட் சாதனம், கம்ப்யூட்டருக்கு அடுத்த நிலையில் மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் பயன்படுத்தக் கூடிய சாதனமாகும் என்று தெரிவித்தார்.

10. இதில் அதிகம் எதிர்பார்த்த யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் புதிய டிஸ்பிளே ஸ்கிரீன் இல்லை. ராம் நினைவகத்தின் திறன் எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை. முந்தைய ஐபேடிலிருந்து வளர்ந்த ஒன்றாகத்தான் இது உள்ளது. புதிய, பெரிய மாற்றங்கள் எல்லாம் எதுவும் கொண்டிருக்கவில்லை. இதனால், போட்டி நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களில் அதிக மாற்றங்களும் வசதிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Read More

இன்னொரு வெடிப்பும் ஏற்படலாம்'
by admin - 0

ஃபுக்குஷிமா அணு மின்நிலையம்ஐப்பானில் நில நடுக்கத்தால் சேதமடைந்த ஃபுக்குஷிமா அணு மின்நிலையத்தில் அணு உலை உருகுவதைத் தடுப்பதற்காக பொறியியலாளர்கள் போராடிவரும் நிலையில் அங்கு இன்னொரு வெடிப்புச் சம்பவமும் ஏற்படலாம் என்ற அச்சத்தை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ஃபுக்குஷிமாவிலிருந்து கசியும் கதிரியக்கம், ‘சட்டப்படியான அதன் பாதுகாப்பு அளவையும்கடந்து ஒரு கட்டத்தில் வெளியேறியதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மின் நிலையத்திலுள்ள அணு உலையொன்றின் மையப்பகுதியில் அதிகரித்துள்ள வெப்பத்தை கடல் நீரைக்கொண்டு தணிக்க அதிகாரிகள் முயன்றும் அது வெற்றியளிக்கவில்லை.

இருந்தாலும் உலையின் பாதுகாப்புக் கவசம் மிகப் பலமாக இருப்பதால் வெடிப்பொன்று ஏற்பட்டாலும் அதனை ஈடு கொடுக்க கூடிய நிலை இருப்பதாகவும் இப்போது, உருகும் அபாயம் எதுவும் இப்போது இல்லையென்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஃபுக்குஷிமா மின்நிலையத்தின் ஆறு அணு உலைகளில் குளிரூட்டல் கட்டமைப்பு தொடர்ந்தும் செயலிழந்தே காணப்படுகின்றது.

புளூட்டோனியமும் யூரேனியமும் கொண்டுள்ள மூன்றாம் இலக்க உலையை உடனடியாக குளிர்மைப் படுத்தும் முயற்சி இது வரை தோல்வியிலேயே உள்ளது.

சுகாதாரப் பாதிப்புகள்

இதேவேளை ஃபுக்குஷிமாவை அண்டிய 20 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், கதிரியக்கக் கசிவு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்களா என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.


கதிரியக்கப் பாதிப்புகள் பற்றிய சோதனைகள்

ஓரளவு கட்டுப்பாடான அளவுக்குள் கதிரியக்க தாக்கத்துக்கு உள்ளாகுபவர்களுக்கு முதற் கட்டமாக வாந்தி, வயிற்றோட்டம், தலைவலி காய்ச்சல் போன்ற சாதாரண நோய் அறிகுறிகளே ஏற்படும்.

ஆனால், முதற்கட்ட அறிகுறிகளுக்குப் பின்னர், சில காலம் குறிப்பிடத்தக்க நோய்கள் எதுவும் காட்டாத போதிலும் கூட பின்னர் சில வாரங்களிலேயே இன்னும் மோசமான அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.

இதேவேளை, உயர் அளவு கொண்ட கதிரியக்கத்தின் தாக்கத்துக்கு உள்ளாகுவோர் இந்த எல்லா அறிகுறிகளுடன் உயிரிழக்கக் கூடிய அளவுக்கு உடல் உள்ளுறுப்புகள் எல்லாம் சேதமடைந்து போகக்கூடிய ஆபத்து இருக்கின்றது.

உடலுக்குள் ஊடுறுவும் உயர் கதிரியக்கம், உடலில் இராசயன சுரப்பிக் கட்டமைப்புகளை சேதப்படுத்தி, அதன்மூலம் உடல் திசுக்களையும் பாதிக்கச் செய்யும்.

கதிரியக்கத்தின் ஊடுறுவால் ஏற்படக்கூடிய நெடுங்கால பாதிப்பு என்றால் புற்றுநோய்களே.

இவ்வாறான சுகாதாரப் பாதிப்புகளை தவிர்ப்பதற்காகவே ஜப்பான், ஃபுக்குஷிமா பிராந்தியத்திலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

கதிரியக்கச் செயற்பாட்டுக்குள்ளான அயடின் மனிதர்களுக்குள் சென்று தைரொய்ட் புற்றுநோயை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு பாதகமற்ற அயடின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

செரினோபில்

இதற்கிடையே, டோக்யோவுக்கு வெளியே நாரிட்டா விமானநிலையம் ஜப்பானை விட்டு வெளியேறும் வெளிநாட்டவர்களால் நிரம்பிவழிகின்றது.

ஐப்பானில் அணு உலைகள் உருகிப்போகும் அபாயம் உள்ளதாக செய்திகள் வெளியானது முதலே வரலாற்றில் 1979 இல் அமெரிக்காவில் த்ரீ மைல் ஐலண்டிலும் அதற்கு ஏழு வருடங்களுக்குப் பின்னர் உக்ரைன் செரினோபில்லிலும் ஏற்பட்ட அணு உலை விபத்துக்களே மீண்டு்ம் நினைவுக்கு வருகின்றன.

அந்த சம்பவங்களின் பின்னர் அணு உலை பாதுகாப்புகள் குறித்து கூடுதல் அக்கறைகள் செலுத்தப்பட்டன.

ஜேர்மனில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் இப்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கி விட்டன.

ஐப்பான் அணு உலை சம்பவம், அணு தொடர்பான உலகத்தின் விவாதங்களை பல கோணங்களில் முடுக்கி விட்டிருக்கின்றது.
Read More

இலங்கையில் பேஸ்புக் நிறுத்தப்படுமா?
by admin - 0

இலங்கையில்சமூக வலையமைப்பான பேஸ்புக்கின் மூலமாக ஒருசிலர் தவறான விடயங்களை முன்னெடுப்பதாக கடந்த 8 மாதங்களில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பண மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், மிரட்டல் போன்ற முறைபாடுகள் கிடைக்கபெற்றுள்ளதகவும், இம்முறைபாடுகளில் அதிகமாக போலியான கணக்கினை வைத்திருப்பவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்கணக்கினை தடுத்து நிறுத்துவதற்காக அவ்வாறான கணக்குகள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹன பல்லியகுரு தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் தேவையற்ற சுய தரவுகளை இடுவதனையும் தெரியாத நண்பர்களை இனைத்துக்கொள்ளுவதையும் தவிர்ப்பதன் மூலம் இவற்றிலிருந்து ஓரளவேனும் தப்பித்துக்கொள்ளலாம்
Read More

March 13, 2011

பேஸ்புக்கின் மெனுபார் நிறத்தை மாற்றுவதற்கான நெருப்புநரி நீட்சி
by admin - 0

பேஸ்புக் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பறிமாறிக்கொள்ளவும் வேண்டிய தகவல்களை தேடிப்பெறவும் பயன்படுகிறது. தற்போதைய நிலையில் கூகுளை மிஞ்ச கூடிய வகையில் பேஸ்புக் தளம் உள்ளது. இணையத்தை பயன்படுத்தும் பலரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பார்கள். நம்ம ஊர் ராமசாமியில் தொடங்கி அமெரிக்க அதிபர் ஒபாம வரை அனைவருமே பேஸ்புக்கில் தங்களை பற்றிய தகவலை அவ்வப்போது தெரியப்படுத்துகிறனர். இந்த பேஸ்புக் தளத்தை தினமும் கோடிகணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகிறனர். இந்த தளத்தில் முகப்பு பக்கத்தில் தோன்றும் மெனுபாரானது Blue கலரில் தோன்றும். இதை மாற்றியைமைத்து நமக்கு விருப்பமான கலரை பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு பேஸ்புக்கில் வழியில்லை. பேஸ்புக் தளத்தில் தோன்றும் மெனுபார் கலரை மாற்ற நெருப்புநரி உலவியில் வழி உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


நெருப்புநரி உளவிக்கான Add-ons யை நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை நெருப்புநரி உளவியை மறுதொடக்கம் செய்துகொள்ளவும். அடுத்ததாக பேஸ்புக் மெனுபார் கலரை மாற்றுவதற்கான ஸ்கிரிப்டை இணைத்துக்கொள்ளவும்.

தரவிறக்க சுட்டி

ஸ்கிரிப்டை நிறுவிய பின் மீண்டும் ஒரு முறை நெருப்புநரி உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். அடுத்து உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்டை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்த பிறது பயர்பாக்ஸ் உலவியில் அடிப்பகுதியில் தோன்றும் Greasemonkey icon மீது வலது கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Userscript commands > Customize Facebook Color என்பதை தேர்வு செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான கலரை தேர்வு செய்து கொண்டு Set என்ற பொத்தானை அழுத்தவும்.


இப்போது பேஸ்புக்கின் மெனுபாரானது நீங்கள் குறிப்பிட்ட கலரில் மாற்றப்பட்டிருக்கும்.


நீங்கள் மாற்றும் பேஸ்புக் கலர் மெனுபாரானது, அனைத்து பேஸ்புக் வாடிக்கையாளர்க்கும் பொருந்தும். நீங்கள் மாற்றம் செய்வது உங்களுடைய உலவியில் மட்டுமே என்பது குறிப்பிடதக்கது
Read More

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்-விக்கிலீக்ஸ் மர்மங்கள்தொடர் உங்கள் விவசாயியில்
by admin - 0

எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்”

- ஜூலியன்.

பகுதி 1
வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தண்ணியடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் ‘விக்கிலீக்ஸ்’ (www.wikileaks.org).(www.wikileaks.ch)ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. . வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம்.

விக்கி’ என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத்தளங்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபிடியாவின் விக்கி வடிவம் தான் விக்கிப்பிடியா. இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை.

உலகப்பந்தில் யாருக்குமே தெரிந்திருக்காத, நம்ம வீடு இருக்கும் தெருவின் வட்டபிரதிநிதிகளை விமர்சித்தாலே, அவர்கள் ‘ஆளடி’ அருணாவாக உருமாறும் வாய்ப்பிருக்கும் இக்காலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரமும் படைத்த பல நாட்டு அரசாங்கங்கள், வல்லரசுகள் போன்ற பயில்வான்களுடன் மோதும் விக்கிலீக்ஸ் எவ்வளவு மிரட்டல்களையும், சவால்களையும், நிர்ப்பந்தங்களையும் சந்திக்கும் என்பதை எவ்வளவு உயரத்தில் நின்று கற்பனை செய்து பார்த்தாலும் எட்டவே எட்டாது :) . ‘சர்வ அதிகாரமும் படைத்த’ என்று சொல்லப்படும் இந்த அரசாங்கங்கள், தங்கள் விரலசைவில் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகும் போர் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு சரக்கடிக்கப் போய்விடும் ஏகாதிபத்திய தலைவர்கள், இவர்கள் எல்லாருமே விக்கிலீக்ஸ் விஷயத்தில் செமிக்காமல் செருமிக் கொண்டிருப்பது ஏன்?. உலக நாடுகளுக்கெல்லாம் ‘அந்தாளு சொல்றத நம்பாதீங்க, அவன் பொய் சொல்றான்’ என்று கோவை சரளா போல் கூவிக் கொண்டிருக்கிறாரே அமெரிக்கப் பேரரசாங்கக் காரியதரிசி ஹிலாரி கிளிண்டன், ஏன்?. ‘தொழில்நுட்பம்’!!!.

‘நாந்தான் அப்பவே சொன்னேன்ல’ என்று கோடிட்டுக் காட்டும் கர்ணப் பரம்பரை வழக்கப்படி, வருங்காலத்தில் புரட்சி வித்துகள் இணையத்தின் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் கையிலுமே இருக்கிறதென்பதை முன்பே இப்பதிவில் சொல்லியிருப்பதை இக்கணத்தில் நினைவுபடுத்த சுடுதண்ணி கடமைப்பட்டிருக்கிறது :D . விக்கிலீக்ஸ் விஷயத்தில் தொழில்நுட்பம் தன் விஸ்வரூபமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சட்ட ரீதியான சூட்சுமம் இருக்கிறது. ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டால் ஜனநாயாக நாடுகளில் கூட கடும் தண்டனைகள் உள்ள இக்காலத்தில் உலகிலேயே ‘வெட்டிப் போடும்’ தண்டனைகளுக்குப் புகழ்பெற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசாங்கப் பதிவுகளைக் கூட பந்தியில் வைத்துச் சந்தி சிரிக்க வைக்கும் விக்கிலீக்ஸ், சட்ட ரீதியான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது?.

விக்கிலீக்ஸ் தனது இணைய வழங்கிகளை (webservers), ஊடகத் தகவல்களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாத சட்டதிட்டங்கள் கொண்ட நாடான ஸ்வீடனில் வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க வழங்கிகளின் மூலம் செயல்பட்டு வரும் டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது. விக்கிலீக்ஸ் நபர்கள் வில்லங்கமான நாடுகளுக்குப் போனால் கைகளுக்குக் காப்பும், மாமியார் வீட்டு விருந்தும் நிச்சயம்.

விக்கிலீக்ஸ் தளத்திற்கு தகவல்கள் அளித்த ஒரு அமெரிக்க இராணுவ வீரருக்கே வாழ்க்கை முழுவதும் சிறைதண்டனைக்கு வாய்ப்பிருக்கும் வேளையில், விக்கிலீக்ஸ் நப்ர்கள் சிக்கினால் சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தே உயிரெடுத்துவிடுவார்கள். இத்தகைய அபாயத்தில் இருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் யார்?, அந்த இணையத் தளம் யார் பெயரில் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது?. தங்களுக்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் நபர்களின் பாதுகாப்புக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன? , அதை நாம் எப்படி உபயோகப் படுத்துவது ;) , போன்ற கேள்விகள் குறித்து இனிவரும் பகுதிகளில் காண்போம்….

தொடரும்-- 2
Read More

பேஸ்புக் நிறத்தை மாற்றுவதற்கான கூகுள் குரோம் உலவிக்கான நீட்சி
by admin - 0

பேஸ்புக் தளமானது நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்ள பயன்படும் தளமாகும். இந்த தளத்தை பயன்படுத்தாத இணைய பயணாளர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு புகழ்பெற்ற தளமாகும். இந்த தளமானது உலகளவில் பெரும்பான்மையான பயன்படுத்தப்படும் தளமாகும். கூகிளுக்கும் பேஸ்புக் தளத்திற்கும் போட்டி நிலவி வந்தது ஆனால் இறுதியில் பேஸ்புக் தளமே அதிகமான இணைய பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. தகவல்களை தேடிப் பெறவும், பழைய நண்பர்களை தேடிப்பிடிக்கவும் பயன்படும் முக்கிய சோஷியல் தளத்தில் பேஸ்புக்கும் ஒன்றாகும். பேஸ்புக் தளமானது 2004 பிப்ரவரி 4 - ல் தொடங்கப்பட்டது ஆகும். இந்த தளம் தொடங்கும் போது மிக சாதாரண அளவில் தான் இருந்தது ஆனால் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த தளம் தொடங்கப்பட்ட நாள் முதலாகவே முகப்புபக்கம் ஊதா (Blue) நிறமாகவே உள்ளது. அந்த கலரை மாற்றியமைக்க ஒரு நீட்சி உள்ளது.

நீட்சியை தரவிறக்க சுட்டி


கூகுள் குரோம் உலவியை ஒப்பன் செய்து சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் பேஸ்புக் தளத்தை ஒப்பன் செய்து உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் அக்கவுண்டில் நுழையவும். பின் அட்ரஸ் பாரின் இறுதியில் தோன்றும் Colorbook ஐகானை பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான கலரை தேர்வு செய்து, பேஸ்புக்கின் முகப்புபக்கத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த Colorbook ஐகானை கிளிக் செய்து மாற்றம் செய்யும் கலரானது, பேஸ்புக் தளத்தில் இருக்கும் இணைப்புகளுக்கும் பொருந்தும்.

பேஸ்புக்கின் மெனுபார் நிறத்தை மாற்றுவதற்கான நெருப்புநரி நீட்சி

Read More

March 12, 2011

ஒரு நகரத்தில் பாதிக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
by admin - 0

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையினால் ஏறத்தாழ 10000 பேரை துறைமுக நகரமான மினாமிசான்ரிகுவில் காணவில்லை என்று ஜப்பான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்.

டோக்கியோவின் மின் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிச் சத்தத்தினாலும் மக்கள் பீதியடைந்து உள்ளனர். அணு மின் உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு 50க்கும் மேற்பட்ட நாடுகள் உதவ முன்வந்திருக்கின்றன. இந்த துயர நிகழ்ச்சியில் இதுவரை ஏறத்தாழ 1300 வரை மரணமடைந்துள்ளனர்.

Read More

ஒரு நகரத்தில் பாதிக்கும் மேற்பட்டோரைக் காணவில்
by admin - 0

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையினால் ஏறத்தாழ 10000 பேரை துறைமுக நகரமான மினாமிசான்ரிகுவில் காணவில்லை என்று ஜப்பான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்.

டோக்கியோவின் மின் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிச் சத்தத்தினாலும் மக்கள் பீதியடைந்து உள்ளனர். அணு மின் உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு 50க்கும் மேற்பட்ட நாடுகள் உதவ முன்வந்திருக்கின்றன. இந்த துயர நிகழ்ச்சியில் இதுவரை ஏறத்தாழ 1300 வரை மரணமடைந்துள்ளனர்.

Read More

ஜப்பானின் நிலநடுக்க தாக்கம்: பூமி 4 அங்குலம் நகர்வு
by admin - 0

ஜப்பானில் நேற்று இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக அதன் பிரதான தீவு தனது அச்சில் இருந்து எட்டு அடி(2.4 மீற்றர்கள்) நகர்ந்துள்ளது.

இதை அமெரிக்காவின் பூகற்பவியல் நிபுணர் கென்னத் ஹுட்னட் தெரிவித்துள்ளார். அதே நேரம் இத்தாலிய பூகற்பவியல் மற்றும் எரிமலைகள் தொடர்பான ஆய்வு மையத்தின் தகவல்களின் பிரகாரம் நேற்றைய நிலநடுக்கம் காரணமாக பூமி அதன் அச்சிலிருந்து பத்து சென்டிமீட்டர்கள்(நான்கு அங்குலம்) நகர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.

பசுபிக் சமுத்திரத்தின் கீழுள்ள புவித்தட்டில் 400 கிலோ மீற்றர் நீளமும், 160 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட பூமிப்பரப்பில் பிளவுண்டாகி புவித்தட்டு நகர்ந்த காரணத்தாலேயே நேற்றைய நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பேரலை என்பன நிகழ்ந்துள்ளன.

அதன் காரணமாக பசுபிக் கடல் பகுதிக்கு கீழான புவித்தட்டு பதினெட்டு மீற்றர்கள் நகர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஜப்பானில் நேற்று இடம் பெற்ற சுனாமித் தாக்கமானது கடந்த 2004 ம் ஆண்டின் சுனாமியுடன் ஒத்ததாக இருந்ததுடன், கடந்த 140 வருடங்களில் அங்கு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக நேற்றைய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

Read More

ஜப்பானை நிர்மூலமாக்கிய சுனாமி: பலி எண்ணிக்கை 1600
by admin - 0

ஆழிப்பேரலை...(சுனாமி) ஜப்பான்...2011



இரண்டாம் உலக போருக்கு பிறகு, உலகம் உச்சரிக்கும் பெயராக மார்ச்..11ம் தேதி ஜப்பான் மாறிப்போகும் என்று காலையில் எழுந்து பல் துலக்கும் போது எந்த ஜப்பானியர்களும் நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

நல்ல மழை பெய்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வந்தால் அது ஒரு பிரச்சனையே இல்லை.... மழை கொட்டிக்கொண்டு இருக்கின்றது அதனால் படிப்படியாய் வெள்ளம் என்று மனது சமாதனபட்டு விடும்...


காலையில் நல்ல வெயில்... சென்னை மயிலாபூரில் காபாலியை சேவித்து விட்டு வெளியே வந்தால் 15 அடிக்கு மேல தண்ணீர் வேகமா வந்த கொண்டு இருந்தால் சிவ சிவ இந்த லோகத்துக்கு போறாதகாலம் வந்துடுச்சி என்று உயிர்பிழைக்க ஓடுவோம் இல்லையா ??? அது போலதான் ஜப்பானிலும் வந்து இருக்கின்றது... நொடியில் நகரம் வெள்ளக்காடாக மாறி விட்டடது...


யாரோ ஒரு நண்பர் அவர் பெயர் கூட எனக்கு தெரியாது.. எனக்கு எந்த நிகழ்வு நடந்தாலும் பிளாஷ்செய்தி என்று தலைப்பிட்டு வரும்.... அப்படித்தான் அந்த செய்தி எனக்கு வந்தது... முதலில் பூகம்பம் அதனால் சுனாமி என்ற அளவில் அதன் மேல் கவனம் வைத்தேன்..ஆனால் உடனே சன் செய்திகளில் சுனாமி பற்றி வீடியோ ஒளிபரப்புவதாக செய்தி வெளியாக...அதனை பார்த்த போது எனது நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது...


கார்கள் பொம்மைகார்களாக மாறிவிட்டன... கப்பல்கள் காகிதகப்பலாக மாறி தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தன..

ஜப்பானியர்களுக்கு பூகம்பமோ சுனாமியோ அவர்களுக்கு பெரிதான பயத்தை உண்டு பண்ணாது.. காரணம் அது போல பல இயற்க்கை எரிச்சல்களை அவர்கள் பார்த்து அதனோடு போட்டி போட்டு மனதிடத்தோடு வாழ்ப்வர்கள்...

பூகம்பம் வந்தால் நாம் வீட்டை விட்ட வெட்ட வெளிக்கு வருவோம் ஆனால் ஒரு டிப்பார்ட்மேண்ட் ஸ்டோர் வீடியோவில் சில பணிப்பெண்கள் ரேக்கில் அடிக்கி வைத்த சரக்குகள் கீழே விழாமல் இருக்க பூகம்பத்தில் ஆடும் ரேக்கை பிடித்துகொண்டு இருந்தார்கள்..

முதலில் இறப்பு எண்ணிக்கை 300 என்றார்கள்... ஆனால் வீடியோவை பார்த்த போது அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று தோன்றியது.. முதலில் அது குப்பை என்று நினைத்தேன்.. கேமரா ஜும் ஆன போது அதில் நிறைய கார்கள் மிதந்துக்கொண்டு இருந்தன...

ஏர்போர்ட் ரன்வேயில் பிளேன் இறங்குவதை பார்த்து இருக்கலாம் ஆனால் இப்படி ஒரு ஜலவேகத்தை பார்த்து இருக்கமாட்டார்கள்....

ஒரு மழை பெய்கின்றது அதன் காரணமாக வெள்ளம்... நன்றாக தெரியும்... ஆனால் வானம் நன்றாக இருக்கின்றது.. ஆனால் பல ஏக்கர் விமான நிலையம் சடுதியில் தண்ணீரில் முழ்குவது வாய்ப்பே இல்லாத செயல் அல்லவா?


1900ம் ஆண்டு வந்தது போல அடுத்து வந்த பெரிய ஆழிப்பேரலை இதுவே...1300 பேருக்கு மேல் இறந்து போய் இருக்கின்றார்கள்... 2லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர்...

ஜப்பான் பிரதமர் மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்....
பேராலையில் கார்களோடு குட்டி விமானங்களும் மிதந்து கொண்டு இருந்தது அந்த காட்சியை பார்க்கும் போது இந்த உலகில் எதுவும் நடக்கலாம் என்று சொல்லியது...

மூன்று ரயில்கள் பேரலையில் காணமல் போனதாக தகவல் இரயில்சேவை நிறத்தப்பட்டு விட்டன...இரயிலில் பயணித்த பொதுமக்கள் எல்லோரும் ரயில் பாலத்தில் நடந்தே தங்கள் இருப்பிடத்தை நடந்து அடைந்தனர்...100 பேர் பயணம் செய்த கப்பல் நிலை பற்றி தகவல் இல்லை....

நல்லவேளையாக சுனாமி எச்சரிக்கை காரணமாக நான்கு அணு உலையையும் மூடி இருக்கின்றார்கள். உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன....

இபபோது உள்ள நிலவரப்படி சுத்தமான குடிநீர் யாருக்கும் இனும் கிடைக்கவில்லை என்று சொல்கின்றார்கள்..
Read More