Latest News

July 16, 2011

நாளுக்கு நாள் இந்தியா பலவீனமடைந்து வருகிறதா?
by admin - 0

மும்பையில் நடந்த நான்காவது மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் இது. முதல் தாக்குதல் 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி நடந்தது. அதற்கு மூளையாக இருந்தவன் தாவூத் இப்ராகிம். 2வது சம்பவம் 2006, ஜூலை 11ம் தேதி நடந்தது. அப்போது ஏழு மின்சார ரயில்களை குறி வைத்து தாக்குதல் நடந்தது. மூன்றாவது சம்பவம் 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நடந்தது. இதுதான் மிகப் பெரிய தாக்குதல். கிட்டத்தட்ட 3 நாட்கள் இடைவிடாமல் தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். 166 பேர் பலியானார்கள்.

2008 தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐ. இப்போது ஜூலை 13ம் தேதி மூன்று இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இது போக மேலும் பல தீவிரவாத தாக்குதல்களை மும்பை சந்தித்துள்ளது.

ஜூலை 13 தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பபது இதுவரை தெரியவில்லை. அரசு அதிகாரப்பூர்வமாக இவர்கள்தான் முக்கியக் குற்றவாளிகள் என்று அறிவிக்கும் வரை நாமும் யார் மீதும் குற்றம் சாட்டாமல் இருக்கப் பார்ப்போம். இப்போதைக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் சந்தேகப் பேர்வழியாக தெரிகிறது. ஆனால் விவரம் இதுவரை கிடைக்கவில்லை. யாரும் பொறுப்பேற்கவும் இல்லை. அதேசமயம், 2 நாட்களுக்கு முன்பு ஐஎஸ்ஐயின் தலைவரான ஜெனரல் பாஷா, வாஷிங்டனுக்கு உறவைப் புதுப்பிக்கப் பயணம் மேற்கொண்டது இப்போது நமக்கு ஏனோ நினைவுக்கு வருகிறது. இந்தியாவும், பிற வளர்ச்சி அடைந்த நாடுகளும் சேர்ந்து பாஷாவை வாஷிங்டனில் வைத்து ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்கும்.

மும்பை சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூட்டாக பேட்டி கொடுத்துள்ளனர் மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும். அவர்களது பாடி லாங்குவேஜ் சிறப்பாக இருந்தது. 2008, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின்போது இருந்ததை விட இப்போது அவர்கள் நிலைமையை நன்றாகவே கையாண்டுள்ளனர்.

நமக்குக் கிடைத்த செய்திகளின்படி, ப.சிதம்பரம் உள்துறை அமைச்சகத்தை விட்டு வெளியேற விரும்பினாராம். அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் நடந்துள்ள இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் ப.சிதம்பரத்தை சீண்டிப் பார்ப்பதாக அமைந்துள்ளது. அவருக்கு விடப்பட்ட சவாலாகவும் தெரிகிறது. 26/11 சம்பவத்திற்குப் பின்னர் ப.சிதம்பரம்தான் சிறந்த உள்துறை அமைச்சர் என்று இந்தியர்கள் அத்தனை பேருமே எண்ணி வந்தார்கள். இன்னும் கூட அந்த எண்ணம் மக்களிடமிருந்து அகலவில்லை. 26/11 சம்பவத்திற்குப் பின்னர் கூப்பிட்டவுடன் என்எஸ்ஜி கமாண்டோக்கள் விரைந்து வருவார்கள் என்று உறுதியளித்தார்கள். இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் அவர்களால் செல்ல முடியும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் புதன்கிழமை, மாலை 6.45 மணிக்கு முதல் குண்டுவெடித்தது. 7 மணிக்குள் மற்ற 2 குண்டுகளும் வெடித்து விட்டன. இரவு 9.30 மணிக்கு ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் டெல்லியில். அப்போது அவர் கூறுகையில், டெல்லி மற்றும் ஹைதராபாத்தை விட்டு என்எஸ்ஜி கமாண்டோப் படையினர் மும்பை நோக்கி விரைகிறார்கள் என்று கூறினார். நாம் என்ன ஆமை வேகத்தில் நகர்ந்து வருகிறோமா?

இருக்கலாம், என்எஸ்ஜி படையினரின் நடமாட்டத்தை ரகசியமாக வைப்பதன் மூலம் தீவிரவாதிகளுக்கு லேட்டஸ்ட் தகவல் போய்ச் சேராமல் இருக்குமே என்பதற்காக அவ்வாறு கூறியிருக்கலாம். அதுவும் நல்லதுதான். ஒருவேளை அப்படித்தான் இருக்குமானால் அதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அப்படி இல்லை என்றால், நாம் கவலைப்பட்டாக வேண்டும்.

உண்மையில் இந்தியர்கள் பலமானவர்கள், தைரியமானவர்கள்தான். ஆனால் நமது அரசியல்வாதிகள்தான் பலவீனமாக தெரிகிறார்கள்.

1. 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் ஜனநாயக இதயத்தை வெற்றிகரமாக தாக்கியது பாகிஸ்தான். இந்திய நாடாளுமன்றத்தைக் காத்து வந்த பாதுகாப்புப் படையினரை வெற்றிகரமாக அவர்களால் கொல்ல முடிந்தது. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குறித்து நாம் யாருமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதுதான் கசப்பான உண்மை. ஒரு அரசியல்வாதி செத்துப் போயிருந்தால், அவருக்கு நாடு முழுக்க எத்தனை சிலைகளை நாம் வைத்திருப்போம்?

அந்த சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான அப்சல் குரு, டெல்லி சிறையில் நிம்மதியாக காலத்தைத் தள்ளி வருகிறார். தன்னை இங்கிருந்து ஜம்மு காஷ்மீர் சிறைக்கு மாற்றுமாறு கூட அவர் டிரான்ஸ்பர் கோரிக்கை வைத்துள்ளார். இப்படிப்பட்ட கோரிக்கைகளையெல்லாம் ஏன் நம்மால் அனுமதிக்க முடிகிறது? அப்சல் குருவை தூக்கிலிட சட்டம் தடுக்கவில்லை. மாறாக நமது அரசியல் முறைகள்தான் தடுக்கின்றன. அப்சல் குருவை தூக்கிலிட்டால், வாக்கு வங்கி போய் விடுமே என்ற அச்சம். இது இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்றில்லாமல், அத்தனை கட்சிகளுக்குமே பொருந்தும்.

2. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம், பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும் இணைந்து நடத்திய கோரத் தாண்டவத்தில் மும்பையில் 2 ஸ்டார் ஹோட்டல்கள், ஒரு ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்டவை தாக்குதலுக்குள்ளாகின. 3 நாட்கள் நடந்த அந்த தாக்குதலை நமது டிவிகள் நேரடியாக ஒளிபரப்பி, கமாண்டோப் படையினரின் முயற்சிகளை சிதறடித்தன. மும்பை உதவி சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் மிகவும் துணிச்சலுடன் பிடித்த தீவிரவாதிதான் கசாப். கசாப்பை நாம் நன்றாக நினைவு வைத்துள்ளோம். துக்காராமையும், அவரது தீரத்தையும் மறந்து விட்டோம்.

3. சில வாரங்களுக்கு முன்பு சோமாலியா கடற் கொள்ளையர்களிடமிருந்து நமது மாலுமிகள் சிலர் விடுவிக்கப்படட்னர். அவர்களை மீட்க கடுமையாக பாடுபட்டவர் பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலரான அன்சார் பர்னி. நமது படையினரும், அரசும் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது விடுவிக்கப்பட்ட அந்த மாலுமிகளுக்குத் தெரியவில்லை. அந்த கடற் கொள்ளையர்கள் ஒரு ராணுவ அணியினர் கிடையாது. அவர்களைக் கூட நமது படையினரால் தாக்கி மாலுமிகளை மீட்க முடியவில்லை என்றால், எப்படி இவர்கள் தீவிரவாதிகளோடு போரிட முடியும்?

4. ஜூலை 10ம் தேதி இரண்டு கோரமான ரயில் விபத்துக்கள் நடந்தன. அதில் ஒன்று வெடிகுண்டு வீச்சுக்கு உள்ளானது. ரயில்வே இணை அமைச்சராக இருந்த முகுல் ராயை, போய் சம்பவம் நடந்த இடத்தைப் பாருங்கள் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் அந்த முகுல் ராயோ, போக மாட்டேன் என்று மறுக்கிறார். பிரதமர் போகட்டுமே என்று பச்சையாகவே பேசுகிறார். அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர், புதிய ரயில்வே அமைச்சரான திணேஷ் திரிவேதி என்ன சொன்னார்?. எனது கட்சித் தலைவர் மமதா பானர்ஜி சொன்னதால், அஸ்ஸாமில் நடந்த விபத்துப் பகுதியைப் பார்வையிட்டேன் என்று சொன்னார். இதற்கு மேல், எந்த அமைச்சராவது பிரதமரை மதிப்பார்களா அல்லது பயப்படத்தான் செய்வார்களா? சந்தேகம்தான்.
Read: In English
மும்பை சம்பவம் குறித்து உலக நாடுகள் எல்லாம் வருத்தம் தெரிவிக்கின்றன, அச்சம் தெரிவிக்கின்றன, கோபம் வெளியிடுகின்றன. அனைவருமே அமைதியாக இருங்கள் என்றும் தவறாமல் கூறுகிறார்கள். நாம் இந்த இடத்தில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வஏண்டும். நமது பிரச்சினையை நாம்தான் சரி செய்தாக வேண்டும், உலக நாடுகள் அதைச் செய்யாது, செய்ய முடியாது. ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு ஆறுதல் கூறி மலர் வளையம் அனுப்பும் வேலையை மட்டும் உலக நாடுகள் செய்யும்.

தடுமாறும் பொருளாதார நிலைதான் நமது அடித்தளமான பிரச்சினை. கற்காலத்திற்குத் திரும்பிப் போக நாம் தயாராக இல்லை. மேலும் முன்னேறிப் போகத்தான் விரும்புகிறோம்- அரசு எப்படி இருந்தாலும்!
« PREV
NEXT »

No comments