Latest News

February 02, 2021

இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு எச்சரிக்கை
by Editor - 0

கொரோனா தொற்றால் இங்கிலாந்து அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போது பனிப்புயல் ஒன்று அந்நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்த உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பீதியை கிளப்பியுள்ளது.
மழையும் பனியுமாக நாட்டில் பெரும் இடையூறை ஏற்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் -15 டிகிரி மற்றும் இங்கிலாந்தில் -6 டிகிரி செல்ஷியஸாக வெப்பநிலை இறங்க இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் 5 cm அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 cm அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது

கிராமப் பகுதிகள் துண்டிக்கப்படலாம் என்றும், வாகன சாரதிகள் மோசமான சூழல் மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடலாம் என்றும், மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மோசமான வானிலை காரணமாக பெரு வெள்ளம் ஏற்படலாம் என்றும், 200 இடங்களுக்கு ஏற்கனவே பெரு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
« PREV
NEXT »

No comments