யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு மேலும் இரண்டு நினைவுதூபிகளை இடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களும், மாணவர்கள் தரப்பும் ஆட்சேபம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு நிலைமை பதற்றத்துடன் காணப்படுவதாக பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி 2019இல் அமைக்கப்பட்டது. இதேபோல, 2018இல் அமைக்கப்பட்ட பொங்கு தமிழர் நினைவுதூபி, மாவீரர் நினைவுதூபி என மேலும் இரு நினைவு தூபிகள் அந்த வளாகத்தில் உள்ளன.
இந்த நிலையில், இலங்கை போரின்போது உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை இடிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
முதல் கட்டமாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்த நிலையில், அது பற்றி கேள்விப்பட்டவுடன் மாணவர்கள் பல்கலைக்கழக வளாக பகுதிக்கு வந்தனர். ஆனால், அதில் பலரையும் உள்ளே நுழைய பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் பெருமளவிலான காவல்துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவை பெற்று, யாழ் பல்கலை வளாகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அந்த பல்கலைகழகத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி வெளிவாயில் பூட்டப்பட்டுள்ளது.
அந்த பிரதேச மக்கள், மாணவர்கள், வெளியிட மக்கள், அரசியல் தரப்பினர் அங்கு குவிந்து வருகிறார்கள்.
bbc tamil
2 comments
சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் ' மதச் சுதந்திரம் கேள்விக்குறி ?
சிங்கள வெறியாட்டாம் உச்சத்தை தொடுகிறது...
செய்வது அறியாது அழுது துடிக்கும் தேசிய உணர்வாளர்கள் களத்தில்..
இரவோடு இரவாக களவாடப்படும் தமிழனின் அடையாளங்கள்
விடாப்பிடியாக தகனம் செய்யப்படும் உடல்கள்
அண்மையில் இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கான பேசு பொருளாகும்
ஒற்றுமையே பலம்
சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் ' மதச் சுதந்திரம் கேள்விக்குறி ?
சிங்கள வெறியாட்டாம் உச்சத்தை தொடுகிறது...
செய்வது அறியாது அழுது துடிக்கும் தேசிய உணர்வாளர்கள் களத்தில்..
இரவோடு இரவாக களவாடப்படும் தமிழனின் அடையாளங்கள்
விடாப்பிடியாக தகனம் செய்யப்படும் உடல்கள்
அண்மையில் இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கான பேசு பொருளாகும்
ஒற்றுமையே பலம்
Post a Comment