Latest News

January 03, 2021

கடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா?வசமாக சிக்கிய ஹேமந்த்!
by Editor - 0

சின்னத்திரை பிரபலமான நடிகை சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி தவறான முடிவால் உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலையில் ஆழ்த்தியது.


எனினும், சித்ராவின் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் பல தரப்பிலும் இருந்து எழுந்தது.அதிலும், சித்ராவின் முகத்தில் இருந்த தழும்புகள் எப்படி ஏற்பட்டிருக்கும் என்ற கேள்விக்கு இதுவரையில் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் அவற்றை நம்பமுடியவில்லை என்றே கூறலாம்.இந்த நிலையில், சம்பவம் நடந்த ஹோட்டல் அறையில் மருத்துவர்கள் செய்த ஆய்வில் விளக்கப்பட்டது என்ன? ஒருவேளை சித்ரா முயற்சி செய்திருந்தால் அவரின் முகத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டிருக்கும்? அவரது சுய முடிவாகவும் இருக்கலாம், அல்லது கொலையாகவும் இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சித்ராவின் காதல் கணவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தது முதல் 6 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு ஹேமந்த் கைது செய்யப்பட்டது வரை சித்ராவின் மரணத்தில் கேள்விகள் எழுந்தன.

ஆனால், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ சட்டவியல் மருத்துவர்கள் அதனை, அவரது சுய முடிவில் எடுத்தது என உறுதி செய்தனர்.

கழுத்தில் சுருக்கு எப்படி? மருத்துவர்கள் விளக்கம்


சித்ராவின் கழுத்தில் எந்த தழும்பும் இல்லை, நாக்கு வெளிப்படவில்லை என்ற தூக்கிற்கான விளைவுகள் ஏதும் இல்லாத நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில், சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ குழுவில் இருந்து சிலர் தனியார் செய்தி புலனாய்வு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலில், ” சம்பவம் நடந்த இரண்டாவது நாளில் சித்ரா உயிரிழந்த அந்த ஹோட்டலுக்கு சென்றோம். அங்கு சித்ரா தங்கியிருந்த அறையை ஆய்வு செய்தோம், அந்த அறையில் தூக்கிட்டுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. சித்ராவுடைய கழுத்தின் முன்புறத்தில் தழும்புகள் இல்லை. ஆனால், கழுத்தின் பின்புறம் துணி இருக்கப்பட்ட காயங்கள் உள்ளன. அவர் கழுத்தில் சுருக்கு போட்டுக்கொண்ட பின்னர் துடித்துக்கொண்டிருந்த வேளையில் தன்னை விடுவிக்க முயற்சித்திருக்கலாம். அப்போது அவருடைய நகங்கள் அவரது முகத்தை கிழித்து காயத்தை ஏற்படுத்தியிருக்கும்” என இவ்வாறு கூறியுள்ளனர்.


இருவரும் குடிப்பார்களாம்.

பொலிசாரின் விசாரணையில் நேரடியாக வெளிவராத சில தகவல்களும் சித்ராவின் தனிப்பட்ட சில பழக்கங்களை தெரியப்படுத்துகிறது. அதாவது, சித்ராவின் உடமைகளை சோதனையிட்டபோது அவரது ஹேண்ட் பேக்கில் 150 கிராம் கஞ்சா இருந்ததாகவும் கூறப்படுகிறது. சித்ராவுக்கு போதை பழக்கம் இருந்ததாகவும் அவர் அடிக்கடி ஹேமந்த்துடன் சேர்ந்து மது குடித்துள்ளார் என்றும் ஏற்கனவே ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால், சித்ராவின் உயிரிழப்பிற்கும், போதை பழக்கத்துக்கும் எந்த அளவில் சம்மந்தம் உள்ளது என்று தெரியவில்லை

அடிப்படை காரணம் ஹேமந்த்

ஆனால், சித்ராவை சந்தேக கண்ணோட்டத்தால் ஹேமந்த் அடிக்கடி சண்டையிட்டு வந்ததும் அதனால் சித்ரா மன உளைச்சலில் இருந்ததும் பொலிஸார் கொடுத்த முதற்கட்ட தகவல். மேலும், சித்ராவுக்கு இரண்டரை வருடங்களாக உதவியாளராக இருந்து வந்த சலீம் என்பவரும், ஹேமந்த் எப்படியெல்லாம் சித்ராவை கொடுமை படுத்தி வந்தார் என்பதை விளக்கி அந்த தகவலை நிரூபணம் செய்தார். ஹேமந்த் மீது அதீத காதலை வைத்திருந்த சித்ராவை அவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டதாலும், சம்பவம் நடந்த அன்று ‘செத்து போ’ என்று கூறியதாலும் மேலும், போதை பழக்கத்தின் விளைவாகவும் சித்ரா துணிந்திருக்கலாம் என்றும் முக்கிய தரப்பில் இருந்து வரும் செய்திகள். அத்துடன், சித்ராவை ஹேமந்த் அடித்து துன்புறுத்தி இருக்கலாம் என்றும், அதன்பின் கதவின் பொத்தானை அழுத்திவிட்டு பின்னர் வெளியில் வந்த பிறகு கதவை சாத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சிபிஐக்கு மாறுமா?
இதற்கிடையில், பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக உட்சபச்ச ரசிகர்களை பெற்ற சித்ராவுக்கு மார்க்கெட்டிங் அதிகமானதால் அவர் தனது உழைப்பை நம்பியே ஒரு கோடிக்கும் மேல் கடன் பெற்று வீடு, கார் ஆகியவற்றை வாங்கியுள்ளார். ஆனால், அதற்கு பின்னால் அரசியல் புள்ளிகளை தொடர்புபடுத்தியும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. காதல் கணவனின் சித்திரவதையுடன் சேர்ந்து கடன் பிரச்சினையும் சித்ராவின் முடிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. நசரத்பேட்டை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், மகளின் மரணத்தின் முழு முக்கிய காரணத்தை கண்டுபிடிக்க சிபிஐ விசாரிக்க வேண்டும் என சித்ராவின் தாயார் மனு அளித்துள்ளார்.
இன்றுவரை சித்ராவின் உயிரிழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, உலகளவில் அவருடைய ரசிகர்களையும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments