Latest News

October 19, 2020

பிரித்தானியாவில் முக்கிய இடங்களுக்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
by Editor - 0

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதையடுத்து அங்கு முக்கிய இடங்களுக்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில், பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் இன்று முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேல்ஸ், 'circuit breaker' வகை ஊரடங்கிற்குள் செல்ல இருக்கிறது. மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் ஆகியவை சில வாரங்களுக்கு மூடப்பட உள்ளன.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து வேல்ஸின் முதல் அமைச்சரான Mark Drakeford இன்று இந்த ஊரடங்கை அறிவிக்க இருக்கிறார்.

வட அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் ஏற்கனவே ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது வேல்ஸிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட இருக்கிறது.

வேல்ஸ் போக்குவரத்து துறையிலிருந்து கசிந்த கடிதம் ஒன்றிலிருந்து, அக்டோபர் மாதம் 23ஆம் திகதி மாலை 6 மணி முதல் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை இரண்டு வார ஊரடங்கு அறிவிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, மற்ற அனைத்து கடைகள் மூடப்படலாம் என அந்த கடிதத்திலிருந்து தெரியவந்துள்ளது
« PREV
NEXT »

No comments