Latest News

August 29, 2020

பிரதேச வாதம் கக்கிய சம்பந்தன்
by Editor - 0


இன்று, வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின், மத்திய நிர்வாகக் குழு பொதுக் கூட்டத்தில், உறுப்பினர்களிற்கிடையே கைகலப்பு இடம்பெற்றதோ :)
கடந்த பொதுத் தேர்தலில், தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் படு தோல்வியடைந்த விடையமாக, பல கேள்விகளும் குற்றச்சாட்டுக்களும் இன் நிகழ்வில் வைக்கப்பட்ட போது, வயதின் முதிர்ச்சியின் காரணமாகவோ அல்லது உண்மையில் அவரின் மனதில் பல வருடமாக பிரதேசவாத பிரிவினையை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு, இன்று சம்மந்தர் ஐயா பாவித்த கடுமையான வார்த்தை, "வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எம்மை அடிமைப் படுத்த நினைக்காதீர்களென்று", இந்தப் பேச்சால் இவரின் அரசியல் சாணாக்கியம் இன்றோடு முடிவிற்கு வந்துள்ளதென்பது தான், எனது கணிப்பீடு !

இன்று, தேசியத் தலைவர் உயிரோடு இருந்தால், இவ் வார்த்தையை(பிரதேசவாதம்) பேசிய சம்மந்தர் ஐயாவை TNAயின் தலைவர் பொறுப்பில் போட்டதற்கு, மக்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பார் !

கிழக்கில் தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைரட்ணசிங்கம் அவர்கள், செய்த பல தவறுகளை சுட்டிக் காட்டி பல உறுப்பினர்கள் பேசிய போது, அவரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காது மவுனம் காட்டிய சம்மந்தர் ஐயாவின் செயற்பாட்டாலும் மற்றும் வடக்கில் தோல்வியடைந்ததற்கு சுமந்திரனின் தனிப்பட்ட சுயநல அரசியலாலும், தமிழரசுக் கட்சி விரைவில் இரண்டாக உடைந்து, மும்மூர்த்திகளான மறைந்த தந்தை செல்வா, வன்னியசிங்கம் மற்றும் நாகநாதன் அவர்களால் உருவாக்கிய பழைய தமிழரசுக் கட்சியின் கொள்கை வடிவத்தில், அடுத்த தலைமுறை இளைஞர்களால் விரைவில் உருவாக்கப்படும் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகை நிர்வாக பணிப்பாளருமான  ஈஸ்வரபாதம் சரவணபவன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பத்து பேர் கொண்ட  அரசியல் உயர் குழுவில்(Politburo )  ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா, மூன்றாவது தலைமுறையாக பரம்பரை பரம்பரையாக  தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் உறுப்பினராக விளங்கி வருகின்ற திரு. கருணாகரன் நாவலன், குணாளன் மற்றும் சரவணபனின் இணைப்பாளர்  செல்வராஜா பிரதாப் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு கிளை துணைத் தலைவர் மிதிலைச்செல்வி  சிறீபத்மநாதன் ஆகியோரையும்  உடனடியாக கட்சியிலிருந்து  நீக்குமாறும் ஆப்பிரஹாம் சுமந்திரன் கோரியுள்ளார் !

இவர்களை சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்குமாறு கோரியிருப்பது, சுமந்திரனின் சிறுபிள்ளைத்தனமானதும் மற்றும் அரசியல் அறிவற்ற செயலாக இருப்பதை வெளிப்படுத்துகின்றது :)

மக்களின் நண்பன்,
பராசுரன் (கனடா / கட்டுவன்)
« PREV
NEXT »

No comments