Latest News

August 19, 2020

ஒற்றை ஆட்சி 2 தேசம் ? பொன்னம்பலம் கூறுவதில் என்ன குழப்பம் ? உங்களுக்கு புரிகிறதா ?
by Editor - 0

முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் கூறிய,  ஒற்றை ஆட்சியில் 2 தேசங்கள் என்ற கருத்தை  இன்னும் சிலர் புரிந்து கொள்ளவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஒன்றும் புது கருத்து அல்ல. விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட கருத்து ஒன்றை தான் இன்று, கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்கள் முன்வைத்துள்ளார். சுருக்கமாக சொல்லப்போனால், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக உலகிற்கு காட்டியதில் இலங்கை அரசு வெற்றி பெற்றது. இதனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பை மட்டும் தான் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும் என்ற விடையத்தை தலைவர் நன்றாக அறிந்து வைத்திருந்தார்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி, அதனை ஒரு மக்கள் சக்தியாக மாற்றினார்கள் புலிகள். இதனூடாக மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்குகளை போட்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தார்கள். அவர்கள் தமிழர்களின் குரலாக மாறினார்கள். இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளே,  தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று அன்று அறிவித்தார்கள். இதனை அடுத்து புலிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் அந்தஸ்த்து கிடைத்தது. அன்று விடுதலைப் புலிகளுக்கு தெரியும் இலங்கையில் ஒற்றை ஆட்சி தான் நடக்கிறது என்று.  அவர்களுக்கு அதில் சந்தேகம் இருக்கவும் இல்லை.

ஆனால் விடுதலைப் புலிகள் ஒரு தேசம் என்ற, கருத்தை  தான் முன்வைத்து தமது காய் நகர்வுகளை நகர்தினார்கள். இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு என்று ஒரு தேசம் இருக்கிறது. என்று உலகிற்க்கு எடுத்துக் காட்ட முனைந்தார்கள். தேசம் என்பதும் தேசிய மக்கள் வாழும் இடம். அவர்கள் ஒற்றுமையாக இருப்பதும், பிரிந்து செல்வதும் அவர்கள் விருப்பம் என்பது,  ஐ.நா சபையின் கோட்பாட்டில் உள்ளது. இது ஐ.நா சாசனம்.

எனவே எம்மை முதலில் ஒரு தேசிய இனமாக, மற்றும் ஒரு தேசமாக ஐ.நா அங்கிகரித்தாலே போதும். பின்னர்,  பிரிந்து செல்லும் உரிமை தமிழர்களுக்கு தாமாகவே கிடைத்துவிடும். எனவே ஒற்றை ஆட்சியில் , நாம் 2 தேசமாக உள்ளோம் என்றும் கஜேந்திரகுமார் சொல்வது. அவரது கருத்து அல்ல. அது புலிகள் முன்னர் சொன்ன கருத்து தான். இதனை புரிந்து கொள்ளாத சிலர், கஜேந்திரகுமார் சொதப்புவதாக கூறி வருவது அவர்களது அறியாமையை வெளிக்காட்டுவதாக உள்ளது.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர்,  விரிக்கும் இந்த வலையில் நாம் சிக்கவேண்டாம். ஒற்றை ஆட்சி என்பது இருந்து விட்டு போகட்டும். நாம் ஒரு தேசம் என்பதனை முதலில் உலகிற்கு உணர்த்த வேண்டும். அந்த கடைப்பாட்டை செய்தாலே போதும். அதனை நோக்கி நாம் நகரவேண்டி உள்ளது. இதுவே தற்போதைய எமது நிலையாக உள்ளது.

நன்றி அதிர்வு 
« PREV
NEXT »

No comments