Latest News

July 03, 2020

சாத்தான்குளம்.. சேகரிக்கப்பட்ட ஆதாரம்.. 5 மணி நேரம் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம்.. பின்னணி!
by Editor - 0

 தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக காவலர் ரேவதி 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். கடந்த 19ம் தேதி சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

 கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் இரண்டு நாட்கள் கழித்து மரணம் அடைந்தனர். அவர்கள் இருவரும் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் எஸ்ஐ ராகுகணேஷ், முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோர் சிபிசிஐடி மூலம் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

 இந்த நிலையில் நேற்று மாலை சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாறிய ரேவதி விசாரணை செய்யப்பட்டார். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இவரிடம் விசாரணை செய்யப்பட்டது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் முதலில் அவர் விசாரிக்கப்பட்டார் அதன்பின் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 5 மணி நேரம் இவர் தனது வாக்குமூலத்தை அளித்து உள்ளார்.

இந்த 5 மணி நேர வாக்குமூலத்தில் ரேவதி முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டதாக கூறுகிறார்கள். இதை தொடர்ந்து இன்று சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் காவலர் மகாராஜன் ஆஜர் ஆனார். விசாரணை நீதிபதி பாரதிதாசனை ஒருமையில் பேசியவர் காவலர் மகாராஜன். இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.


அதேபோல் இன்னொரு பக்கம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தென்மண்டல ஐஜி முருகன், தூத்துக்குடி எஸ்பி ஜெயகுமார், நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபு, மூன்று பேரும் காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். பல்வேறு ஆதாரங்களை இவர்கள் பெற்றுக்கொண்டனர். அதோடு சிபிசிஐடிக்கு இவர்கள் அளிக்க வேண்டிய முக்கியமான ஆதாரங்களை திரட்டினார்கள்.

இதுவரை நடந்த விசாரணையில் சாட்சி சேகரித்தல், ஆதாரம் திரட்டுதல் பணிகள் முடிந்துள்ளது. குற்றவாளிகள் எல்லோரும் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் திரட்டப்பட்டு உள்ளது. சிசிடிவி ஆதாரங்கள் கூட இவர்களுக்கு எதிராக புறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து விசாரணைகளும் முடிந்துள்ள நிலையில் மாஜிஸ்திரட் பாரதிதாசன் விசாரணையை முடித்துக்கொண்டுள்ளார்.





« PREV
NEXT »

No comments