Latest News

July 28, 2020

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு கொரோனா! மருத்துவர்கள், தாதியர்கள் தனிமையில்!
by Editor - 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயத் தாக்கம் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

நோயாளி ஒருவர் அண்மையில் நோய்த் தாக்கம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

அவருக்கு யாழ்.கொரோனா பரிசோதனைக் கூடத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் அப்போது அவருக்கு கொரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை.

இருந்தபோதிலும் அவர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டிருக்கின்றார்.

அங்கிருந்து அவருடைய மாதிரி சேகரிக்கப்பட்டு அனுராதபுரம் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தகவல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 07ஆம் இலக்க விடுதியில் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடுதியில் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்டவர்களை தனிமைப்படுத்த வைத்தியசாலை அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரியவருகிறது.

இதனிடையே தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவர் குறித்த அழைப்புக்கு ஒத்துழைக்க மறுத்திருப்பதாகவும் அவரைத் தேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

பிந்திய தகவல்

குறித்த நோயாளி தானாகவே வந்து வைத்தியாலையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தபோதிலும் அவர் சகோதர மொழி பேசியமையால் அவர் படைத்துறையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன

« PREV
NEXT »

No comments