Latest News

June 30, 2020

நெதர்லாந்தில் எழுச்சியுடன் நடைபெற்ற அடிக்கற்கள் வீரவணக்க நிகழ்வு.!
by Editor - 0

நெதர்லாந்தில் எழுச்சியுடன் நடைபெற்ற அடிக்கற்கள் வீரவணக்க நிகழ்வு.!


🔴தேசியத்தலைவரின் வழிநின்று தமிழீழ விடுதலைக்கு வித்திட்ட அடிக்கற்கள் வீர வணக்க நிகழ்வு  28-06-2020 ஞாயிறு காலை 11.00மணிக்கு அல்மேர பிரதேசத்தில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

பொதுச்சுடரேற்றல் தேசியக்கொடியேற்றல் ஆகிய ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து எமது தேச விடுதலைக்கு அத்திவாரமாயிருந்த எமது அடிக்கல் நாயகர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கமும் செலுத்தப்பட்டது.
பின் அகவணக்கமும் அந்த வீரமறவர்களின் நினைவு சுமந்த பேச்சும் எழுச்சிக்கவிதையும் இடம்பெற்றது. இன்றைய காலச் சூழலுக்கு அமைவாக நெதர்லாந்து சட்ட வரையறைக்கு உட்பட்டு அமைதியுடனும் எழுச்சியுடனும் நடைபெற்ற இந்நிகழ்வு இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப்பாடலுடன் தேசியக்கொடி கையேற்கப்பட்டு இறுதியில்
எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவெய்தியது.
« PREV
NEXT »

No comments