Latest News

November 27, 2019

யாழ்.பல்கலைக்கழக தடையுத்தரவை தகர்த்து உட்பிரவேசித்த மாணவர்கள்!
by Editor - 0

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் தமிழர் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு கேட் வெட்டி கொண்டாடினார்கள். 

அதனையடுத்து யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர்களுக்கும் பல்கலை வளாகத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாக தகுதிவாய்ந்த அதிகாரி க.கந்தசாமி அறிவித்தல் விடுத்திருந்தார்.

அதனையடுத்து நேற்றைய தினமும் இன்றைய தினமும் பல்கலைக்கழக செய்பாடுகள் முடங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் காலை இரண்டு பேருந்துகளில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பல்கலைக்கழகம் முன்பாக குவிக்கப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து சற்று நேரத்திற்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக தடையுத்தரவையும் மீறி மாணவர்கள் உட்பிரவேசித்துள்ளனர்.

இதன் போது மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments