இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னால் இன்று நண்பகல் நடைபெற்ற மேற்படி
ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பேரினவாதத்தை நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய படி பெருமளவிலான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த திங்கட்கிழமை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பௌத்த தேரரின் உடலம் அடக்கம் செய்யப்பட்டமை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் இலங்கை நீதித்துறையின் மீதான கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதனையடுத்து நேற்றைய தினம் (செவ்வாய்கிழமை) முல்லைத்தீவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment