பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு
அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை பிரித்தானிய நீதிமன்றம் இரத்து செய்தமையை கண்டித்து லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் முன்றலில் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக கடந்த 21 ஆம் திகதி குறிந்த நீதவான் நீதிமன்றில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக இரத்து செய்யப்பட்டு இன்று (1) மீண்டும் குறித்த வழக்கிற்காக நீதிமன்று கூடுகின்ற நிலையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
No comments
Post a Comment