வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி வடக்கு கிழக்கு இணைந்து இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துகின்ற நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் குரலாக சர்வதேச அரங்கி ஒலிக்கும் வகையில் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டன் வெஸ்மினிஸ்டர் இலக்கம் 10 இல் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திற்கு முன்னால் காலை 10 மணியளவில் ஒன்று திரண்ட பெருமளவிலான மக்கள் சர்வதேசமே காணமல் போன எமது உறவுகளின் விடயத்தில் கால நீடிப்பு வேண்டாம் சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவர்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments
Post a Comment