நினைவு மனித உரிமைகள் மகாநாடு -தமிழர் தகவல் நடுவகம்
தமிழர் தகவல் நடுவம் ஆண்டுதோறும் மேற்படி நிகழ்வை கொண்டாடி வருகின்றது இவ்வருடமும் தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று New Malden என்னும் இடத்தில் நடைபெற்றது.
தமிழ் மக்களுக்கு எதிராக ஈழத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சக இன மக்களுடன் நினைவுகூர்ந்து அதனை எவ்வாறு சர்வதேசத்திற்கு கொண்டு சென்று அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தினை பெற்று கொடுப்பது என ஏனைய நாட்டு மக்களின் அனுபவங்களும் பகிரப்பட்டது.
இந்த நிகழ்வினை திருமதி சர்வா குமாரராஜாவின் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில்
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டேவி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், Dr.Janroj,Yilmaz Keles,Senior Research Follow (Law) அவர்களின் அனுபவ உரையும், West African Drummers இன்னும் பல கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பல்லின மக்களின் முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மனித உரிமைகளுக்காக உழைத்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான செயற்பாட்டாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி இந்நிகழ்விற்கு ஒருங்கிணைப்பாளர்களாக சிவகுரு சஜூபன், பற்றிக் பிரான்சிஸ் வசந்தராஜன்,லலிதாரூபி
வேலாயுதம்பிள்ளை,ஜனகன் கிருஷ்ணமூர்த்தி, கஜன், கணேச சேகரன், நிஷாந்தி,மகேந்திர லிங்கம் யோகானந்தன் ,நகுலேஸ்வரம் நவரத்தின ராஜ் ராஜ் திரு விக்னேஸ்வரன் அஸ்வின் சுகிர்தன் ,பொன்ராஜ்,நிருஷன்
விக்னேஸ்வரன்,சிவஞானம் ஜெகநாதன் ,சுதன் இராயேந்திரம் ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.
No comments
Post a Comment