யாழ் உருளைக்கிழங்கு உற்பத்தி வலையம் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் பிரகடனம்
2000 பேருக்கான உருளைக்கிழங்கு விதை தானியம் இன்று காலை 20/11/18 புத்தூர் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றிருந்த நிகழ்வில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்கையாளர்களுக்கு விதை உருளைக்கிழங்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
76 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 50 சத வீத மானியத்துடன்,1000 ரூபா விசேட மானிய உரமும் ஊக்குவிப்பாக வழங்கப்படுவதோடு காப்புறுதி,கொள்வனவு,நேரடி சந்தை வாய்ப்பு மற்றும் யாழ் உருளைக்கிழங்கு என்னும் வர்த்தக நாம தர பொதியிடலுடன்,உயர்தரமான வணிக வர்த்தக உற்பத்திக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது.
விவசாய பிரதி அமைச்சர் அவர்கள் உரையாற்றும் பொழுது கருத்து தெரிவிக்கையில்
கடந்த நான்கு மாத காலப்பகுதியில் விவசாய நல செயல்திட்டங்களுக்காக 600 மில்லியன் ரூபா வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு,விவசாய செயல் திட்டங்களுக்காக வட மாகானதிற்கும் விசேடமாக யாழ் மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
40 சத வீதம் விவசாய செய்கையாளர்களாக இருந்தும் பின்தங்கிய நிலையில் இருக்கும் விவசாய பெருமக்களை ஏனைய மாவட்டங்களை போன்று முன்னோக்கி கொண்டு செல்வதற்காக துரித விவசாய மீள் எழுச்சி திட்டம் வட மாகாண விவசாயிகளுக்கு உந்துசக்தியாக அமையும் வகையில் விவசாய சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் உயர்வுக்கு உருளைக்கிழங்கு உற்பத்தியை போன்று மாற்று பயிர் செய்கையாகவும்,அதன் ஊடாக உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதி வாய்ப்புக்கள் ஊடாக சிறந்த வருவாயை பெற்று கொள்ளும் அதேவேளை புகையிலை செய்கையாளர்கள் தங்களது செய்கைகளை தொடரும் அதேவேளை மாற்று பயிர்களை மேற்கொள்ளும் வரை உற்பத்தி நடவடிக்கைகளை குறைத்து மேற்கொள்ளுமாறும்,விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் விவசாயிகளுக்கு பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் உரையாற்றும் போது உறுதியளித்திருந்தார்.
No comments
Post a Comment