மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டம் நாளை (21.10.2018) காலை 9.30 மணிக்கு யாழ் பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்காய் வடக்கில் இருந்து உரிமைக் குரல் கொடுக்கும் நோக்கில் சமூக வலைத்தள நண்பர்களினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments
Post a Comment