Latest News

October 24, 2018

யாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்!
by admin - 0

யாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்!



யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் 2ம் தரத்தில் கல்வி பயின்று வரும் 7 வயதே நிரம்பிய செந்தில்குமரன் அருஸ்கான் என்ற மாணவன் தலைகீழாக பல மீட்டர் தூரம் கைககளினால் நடந்து எல்லோரையும் வியப்பிற்குள்ளாக்கி வருகிறான்.


யாழ்ப்பாணம் அம்பாள் வீதி, மல்வம் உடுவிலில் வசித்துவரும் மேற்குறிப்பிட்ட சிறுவனானவன் தனது வீட்டில் விளையாட்டிற்காக தலைகீழாக பல மீட்டர் தூரம் கைகளினால் நடந்து தனது பெற்றோர் சகோதரர்களை ஆர்ச்சரியப்படுத்தியது மட்டுமின்றி தனது வீட்டிற்கு அருகில் வசிப்போரையும் ஆர்ச்சரியப்படுத்தி வருகிறார்.

தற்போது தான் கல்வி பயின்று வரும் பாடசாலையிலும் தனது அதீத திறமையினால் ஆசிரியர், மாணவர்கள் என அனைவரது மனங்கவர்ந்த சாதனை மாணவனாக திகழ்ந்து அனைவரது பாரட்டுக்களையும் பெற்று வருவதோடு…

இம்மாணவன் தான் கல்வி பயின்று வரும் பாடசாலையில் நடைபெறுகின்ற அனைத்துப் போட்டிகளிலும் பங்குபற்றி பல பரிசில்களையையும் பெற்றுள்ளார். நடனம், நாடகம் மற்றும் பாடல் நிகழ்வுகளிலும் பங்குபற்றி அதிலும் சாதனைகளை நிகழ்த்தி பரிசில்களையும் பெற்று தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்து வருகிறார்.







இவரது அதித திறமையை ஊக்குவித்து இவரை பெரும் சாதனை மாணவனாக உருவாக்க இவரது பெற்றோரையும் ஆசிரியர் சமூகத்தையும் விவசாயி இணையம் பேரன்போடு கேட்டுக்கொள்கிறது.

சிறுவன் அருஸ்கானை நம் தமிழ் சமூகமும் அரசாங்கமும் கண்டுகொண்டு இம்மாணவனுக்கு மென்மேலும் பல வழிகளில் உதவி செய்து ஊக்கப்படுத்தி வருவார்களெனில் நாளை நாட்டிற்கும் பெருமை சேர்த்து தமிழரின் விளையாட்டுச் சாதனையாக உலக அரங்கில் தடம் பதிப்பார் என்பது திண்ணம்.
« PREV
NEXT »

No comments