Latest News

August 04, 2018

விளையாட்டால் ஓன்றிணைவோம்-தியாக தீபம் திலீபன் நினைவாக நாடு கடந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் விளை யாட்டு நிகழ்வு
by admin - 0


விளையாட்டால் ஓன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் ஈழத்தமிழர்கள் பிரிட்ட னின் லண்டன் நகரில் ஒன்று கூடி பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றினர். தியாக தீபம் திலீபன் நினைவாக நாடு கடந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பிரிட்டனின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பலரும் விளை யாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன், ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.

















500ற்கு மேற்பட்ட தொண்டர்கள் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வை தனித்தனியாக ஒவ்வொருவர் பெயர்களைச்சொல்லி நன்றி கூற முடியாது என்பதால்

*“என் தோளோடு தோள் நின்று இந்த நிகழ்வை வெற்றிபெற  வேலை செய்த என் அன்பிற்குரிய சகோதர சகோதரிகள்   அத்தனைபேரிற்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள்”* என்று சொல்லிக் கொள்வதில் மன மகிழ்வடைகிறேன்.



அடுத்ததாக இன்றைய உலகில் எந்தவொரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமாயினும் அதற்கு நிதி ஆதாரம் என்பதே தேவையாக உள்ளது, இன்று நடக்கும் இந்த மாபெரும் நிகழ்வின் முதுகெலும்பாக இருக்கும் விளம்பரதாரர்கள், நிதி உதவி செய்த நிறுவனங்கள், தனி நபர்கள் அத்தனை பேரையும் நன்றியோடு நினைவில் கொள்கின்றேன்.



நிகழ்வின் கதாநாயகர்களாக இருக்கின்ற விளையாட்டு வீரர்களையும் அந்த வீரர்களின் கழகங்களையும் நன்றி பாராட்டுவதோடு இனிவரும் காலங்களில் நம்மால் நடாத்தப்படப் போகின்ற விளையாட்டு நிகழ்வுகளிலும் தொடர்ந்து பங்குபெற்ற வேண்டுமென உரிமையோடு கேட்டுக் கொன்கின்றேன்.



இந்த நிகழ்விற்கு தம் பிள்ளைகளை அனுப்பிவைத்த பெற்றோர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். நம் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட பிரதம விருந்தனர், சிறப்பு விருந்தினர்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் இந்த நிகழ்விற்கு தமிழர் என்ற உணர்வோடு கலந்து சிறப்பித்த தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.



முக்கியமாக இந்த நிகழ்வை திறம்பட நடாத்த அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய நம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரை நன்றியோடு நினைத்து பார்க்கின்றோம், அது போலவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.



இறுதியாக.....

*“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்  சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

என்ற அண்ணன் திலீபனின் புரட்சி மொழியையும் அவரின் தியாகத்தையும் நினைத்தபடி வாழ்த்துரையை நிறைவு செய்கின்றேன்.*



நன்றி

சொ.யோகலிங்கம்

விளையாட்டும் சமூகத்தின் பிரதி அமைச்சர்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

www.tgte.org

www.tgtesports.co.uk







http://www.naathamnews.com/tgtemedia-sportsnews-uk/



Promotion on Ibc TV :

https://youtu.be/xiaOfcGriEE



https://youtu.be/jCV-N3D0ymk



*TGTE Sports Meet 2018.....*







"விளையாட்டால் ஒன்றிணைவோம்"



“தமிழரின் தாகம் தமிழீழ தயக்கம்”
« PREV
NEXT »

No comments