மன்னார்- சவுத் பார் (SOUTH BAR) பிரதேசத்தில் சடடவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் மண்ணகழ்வானது அப்பிரதேசத்து மக்களது வாழ்வியல் நிலையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது
இப்பிரதேசத்தில் இறால் வளர்ப்பிற்கென மாவட்ட செயலகம் மற்றும் கடற்தொழிலாளர் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர மக்களது குடியிருப்பு பிரதேசங்களிலும் அவர்களின் வாழ்விடங்களில் அடாத்தாக இடங்கள் பிடிக்கப்பட்டு இவ் இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இது தொடர்பாக மாவட்ட செயலகம்/ கடற்தொழிலாளர் திணைக்களம்/மாவட்ட பாராளுமன்றமற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை
மேலும் அப்பிரதேச மக்கள் குறிப்பிடுகையில் கடந்த மாத காலங்களில் 150 டிப்பர் மணல் அப்பகுதியிலிருந்து சடடவிரோதமாக அகழ்ந்து எடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் ஆராய சென்ற வடமாகாண மகளிர்விவகார அமைச்சர் அனந்தி சசிதரனிடம் முறையிட்டனர்
No comments
Post a Comment