Latest News

July 08, 2018

முதலமைச்சர் கதிரை கூட்டமைப்புடன் டக்ளஸ் பேரம்!
by admin - 0

முதலமைச்சர் கதிரை கூட்டமைப்புடன் டக்ளஸ் பேரம்!




வடக்கு முதலமைச்சர் கதிரையினை விட்டுக்கொடுத்தால் கூட்டமைப்புடன் சேர்ந்து வடமாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக டக்ளஸ் கூட்டமைப்பிற்கு செய்தியனுப்பியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மத்தியில் அதிகாரம் புளித்துப்போயுள்ள நிலையில் வடமாகாணசபையின் முதலமைச்சர் கதிரையிலேற எதனையும் செய்ய ஈபிடிபி தயாராகிவருகின்றது.எமது மக்களது துரதிர்ஸ்டம் காரணமாக வடக்கு மாகாண சபையானது மக்களுக்கு எவ்விதமான பலனையும் பெற்றுக் கொடுக்காமல் வெறும் பதவிகளுக்கான சபையாக மாறிவிட்டுள்ளது என டக்ளஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக அதாவது, 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் இருந்து ஆரம்பித்து, படிப்படியாக முன்னேற்றம் காண வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இன்று வடக்கு மாகாண சபையை எடுத்துக் கொண்டால் செயற்திறன் இன்மையினால், அதன் மூலமான பலன்கள் எமது மக்களுக்குக் கிட்டாமல் உள்ளது. தற்போது வடக்கு மாகாண சபையின்  ஆட்சி நிர்வாகத்தினை மேற்கொண்டு வருகின்ற பிரதான கட்சியினரே “வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் தெரிவானது தவறானது” எனக் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

நாம் வடக்கு மாகாண சபையின் ஆட்சியினைக் கைப்பற்றியிருந்தால், வடக்கு மாகாணத்தில் தேனும், பாலும் ஓட வைத்திருப்போம். எனினும், எமது மக்களது துரதிஸ்டம் காரணமாக வடக்கு மாகாண சபையானது எமது மக்களுக்கு எவ்விதமான பலனையும் பெற்றுக் கொடுக்காமல், வெறும் பதவிகளுக்கான சபையாகவே மாறிவிட்டுள்ளதெனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே தனக்கு முதலமைச்சர் கதிரையினை விட்டுக்கொடுத்தால் இணங்கி செயற்பட டக்ளஸ் செய்தி அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.தற்போதைய முதலமைச்சர் மீள கதிரையேறுவதை தடுக்க கூட்டமைப்பு -ஈபிடிபி கூட்டு காலத்தின் தேவையென டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகின்றது.

அண்மையில் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டமைப்பு ஆட்சிபீடமேற ஈபிடிபி முழு ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments