Latest News

May 18, 2018

தாய் தமிழக உறவுகளுக்கு, இன மொழி ரீதியாக ஒன்றிணையுங்கள்; மறுபடியும் உலகை ஆள்வோம்
by admin - 0

தாய் தமிழக உறவுகளுக்கு, இன மொழி ரீதியாக ஒன்றிணையுங்கள்; மறுபடியும் உலகை ஆள்வோம்.
----------------------------------------------------------



மே 18 தமிழின அழிப்பு நாளாகும்...
அன்றைய நாளில் மட்டும் முள்ளிவாய்க்காலில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட உங்கள் தொப்புள்கொடி உறவுகளிற்காக ஒருநாளாவது கேளிக்கை, களியாட்ட நிகழ்வுகள் போன்றவற்றைத் தவிர்த்து...

மாறாக

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக கருத்தரங்குகள், நினைவஞ்சலிக் கூட்டங்கள்  மற்றும் அந்த மக்கள் சார்ந்த நினைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதுவே அந்த இறந்த ஆன்மாக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் புண்ணியம் ஆகும்.

தற்போது தமிழகத்தில் "மே18" என்ற "தமிழின அழிப்பு தினத்தை" பெரிதாக நினைவு கூறவிடாமல் தடுப்பதற்காக பல புல்லுருவிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக ரஜினிகாந்த் அவர்கள் ஈழத்தமிழர்களின் முக்கிய பெரும் நினைவு தினங்களில் எல்லாம் தனது ரசிகர்களைச் சந்தித்து அர்த்தமற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது மற்றும் போலித்தனமாக அறிக்கைகளை வெளியிடுவது போன்ற கேலிக்கூத்துகளை நிகழ்த்தி வருகிறார்.

ஒரு போலியான திரைப்பட நடிகனை தமது பெற்றோர்கள் மற்றும் தெய்வங்களை விட உயர்ந்தவர்களாக பார்க்கும் மூடர் கூட்டம் உலகத்தில் தமிழ்நாட்டை விட வேறு எங்கும் இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். இந்த மூடர்களெல்லாம், கைக்கெட்டும் தூரத்தில் இறந்த போன அந்த மக்களின் ஆன்மாக்களுக்கு சின்ன நினைவஞ்சலி செய்யக்கூட துப்பில்லை; என்பது அதைவிடக் கேவலம்!!



தறுதலைத் தலைவன் எவ்வழியோ, அவ்வழியே மானங்கெட்ட ரசிகர் மந்தைகளும்.

இதுதவிர...

தமிழின எதிர்ப்பாளர்கள் பலரும் "மே18" என்ற பெரும் வரலாற்று நினைவு தினத்தை அனுஷ்டிக்க விடாமல் வேறு விடயங்களில் கவனங்களைத் திருப்புவதற்கு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக திரைப்படங்கள் வெளியிடுதல் மற்றும் கேளிக்கைகள் நடத்துவது மற்றும் தொலைக்காட்சிகள் ஊடாக கூத்து நிகழ்வுகளை அன்றைய நாளில் நடத்தி மக்களை வேறு பக்கத்தில் திசை திருப்புவது.

காரணம், உலகத்தில் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மட்டுமே திரைப்பட நாயகர்களை தெய்வங்களுக்கு நிகராக வணங்கிக் கொண்டாடுவதை வைத்து  உளவுத்துறையினர் மற்றும் தமிழின எதிர்ப்பாளர்கள் பலர் தமிழக இளைஞர்களை இன ரீதியாக ஒன்றுபட விடாமல் மேற்கண்ட விடயங்களை முன்னெடுப்பதால் தடுக்கலாம் என நினைக்கிறார்கள். அதற்கு தமிழக இளைஞர்களும் இடம் வகுத்து கொடுக்கிறார்கள்.

தமிழக மக்கள் இன, மொழி ரீதியாக ஒன்றிணைந்தால் இவர்களை விட பலமிக்க இனம் உலகில் வேறெங்கும் இல்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உலகில் அதிமூளை கூடிய யூத இனத்தைவிட   அதிக பலம் வாய்ந்த அறிவு கூடிய இனம் தமிழினமே! உதாரணமாக சாதி, மத பேதங்களை மறந்து இன மொழி ரீதியாக ஒரு தலைவனின் கீழ் ஒன்றுபட்டு பெரும் வரலாறு படைத்த ஈழத்தமிழர்களே ஓர் எடுத்துக்காட்டு.

அந்த ஈழத்தமிழர் போல் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இன மொழி ரீதியாக ஒன்றிணைந்தால் இவ்வுலகில் வல்லரசு நாடுகளையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அறிவியல் மற்றும் போரியல் வரலாற்றைப் படைத்துவிடுவார்கள் என்ற அச்சமே பல சர்வதேச நாடுகளுக்கு இன்றுவரையும் உறுத்தலாக உள்ளது.

அதனாலேயே இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் உருவாகும் எழுச்சிகள், போராட்டங்களை இந்திய அரசுடன் சேர்ந்து மறைமுகமாக சர்வதேசமானது அடக்கி வருகிறது. அத்துடன் இந்திய அரசும் இன்றுவரை தமிழகத்தை வஞ்சித்தே வருகிறது. (உ+ம் காவேரி பிரச்சனை மற்றும் இலங்கை அரசால் கொல்லப்படும் மீனவ பிரச்சனை இன்னும் பல)

கடந்த காலங்களில் ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களுடன், மக்களும் ஒன்றிணைந்தது உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இதே போன்ற இனியொரு கட்டத்தை உருவாக்க விடக்கூடாது என்பதிலேயே இந்திய உளவு அமைப்புக்கள் மும்முரமாக இயங்கி வருகின்றன.

சில இலட்சம் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து சொற்ப வளங்களை வைத்து வென்றுகாட்டி பெரும் வரலாறு படைத்தது போல், பல கோடி தமிழ்நாட்டு தமிழர்கள் பல வளங்களை வைத்து இன மொழி ரீதியாக ஒன்றுகூடினால், தமிழகம் உலகிலேயே முதன்மை நாடாக வந்து விடும் என்ற அச்சம் காரணமாகவே ஈழத்தமிழர் போராட்டத்தை சிங்கள அரசுடன் சேர்ந்து உலக வல்லரசுகள் அழித்தது போல் தமிழகத் தமிழர்களின் இன மொழி ரீதியான ஒன்றுசேரலை தடுப்பதிலேயே மத்திய மாநில உளவுத்துறையினர் பல வகைகளில் வேகமாக செயற்பட்டு வருகின்றனர்.

அதற்கு தமிழகத் தமிழர்களின் திரைப்பட மோகம், மட்டைப்பந்து (கிரிக்கெட்) மோகம் மற்றும் களியாட்ட கேளிக்கை மோகங்களை வைத்து அத்துடன் சாதி மத வெறியையும் தூண்டி ஒரு போதைநிலையில் வைத்திருப்பது. 

இதை எப்போது தமிழக மக்கள் உணர்ந்து என்று வெளிவருகிறார்களோ அன்றுதான் தமிழகத்திற்கு சுபிட்சம் கிடைக்கும்.

ஆனால், முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் பின் திரு. சீமான் அவர்களால்  தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஈழத்தமிழர் போராட்டத்தின்பால் உள்ள நீதி நியாய தர்மங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. தமிழக இளைஞர்கள் மத்தியிலும் ஒரு எழுச்சி உருவாகியது. அத்துடன் நின்றுவிடாமல் "மாவீரர் நாள்" நிகழ்வும் வருடா வருடம் நினைவுகூறப்பட்டு வருகிறது. மற்றும் ஈழத்தமிழர் போராட்டம் சார்ந்த பல நிகழ்வுகளும் மெதுமெதுவாக தமிழகத்தில் பரவி வருகிறது. இது இந்திய உளவுத்துறையினருக்கு பெரும் தலைவலியை உருவாக்கி விட்டுள்ளது.

இவ்வேளையில் வருகிற மே18 அன்று நாம் தமிழர் கட்சியினரால் முன்னெடுக்கபடவுள்ள பெருமெடுப்பிலான "முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தினம்" ஆனது இன்னும் பல தமிழக இளைஞர்களையும் மக்களையும் இன மொழி ரீதியாக ஒன்றிணைத்து விடும் என்றே உளவுத்துறையினர் கருதி மக்கள் ஒன்றிணைவதை தடுக்கும் வகையில் வேறு வகையான வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதாரணமாக மே18 அன்று வெளிவரும் விஜய் அண்டனியின் "காளி" திரைப்படம் போன்றவை. 

தமிழின அழிப்பு நாளான மே18 அன்று உலகத் தமிழர்கள் அனைவரும்  "தமிழின அழிப்பு நாளாக" நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் திருச்சியில் பிறந்த விஜய் அண்டனி தன் படத்தை வெளியிடுவதென்பது எதைக் குறிக்கிறது?

ஆகவே தமிழர்கள் அனைவரும் மே 18 ஆன அன்றைய தினத்தை "தமிழின அழிப்பு நாளாக" நினைவு கூர்ந்து மற்றைய நிகழ்வுகளை புறக்கணியுங்கள். 

உலகை ஆண்ட தமிழர் பரம்பரையில் வந்த நாம் இன மொழி ரீதியாக ஒன்றிணைந்து மறுபடியும் உலகை ஆள்வோம்.

- வல்வை அகலினியன்

« PREV
NEXT »

No comments