Latest News

May 24, 2018

லண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்
by admin - 0

லண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழகம் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 








இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் தலைதூக்கியுள்ளனர்.இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய தமிழ்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலின் மகனை லண்டன் வாழ் தமிழர்கள் தாக்கியுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm



« PREV
NEXT »

No comments