இன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள்
இந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்
இராணுவம் உஷ் என்று சத்தம் போட்டாலே ஓடிக்கொண்டிருக்கிற சைக்கிளை விட்டு இறங்கி என்ன மாத்தையா ?? என்று கேட்டு கூனி குறுகி எல்லோரும் நின்ற காலத்தில் அந்த இராணுவமே சுத்தி வளைத்து நின்று அச்சுறுத்தல் விட்டு கொண்டிருக்கும் போதே சுவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு நெஞ்சு நிமித்தி " சுயநிர்ணய உரிமை - மரபு வழி தாயகம் - தமிழ் தேசியம் " என்று உரத்து குரல் கொடுத்தவர்கள்
தமிழீழ விடுதலை புலிகள் வன்னியில் இயங்கிய போது யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளையும் விடுதலை புலிகளின் வேவு படையணி கண்காணிக்க கூடிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தவர்கள் இந்த சின்ன பிள்ளைகள் தான்
புலி என்று கதைத்தாலோ , புலியின் அடையாளங்களை வெளிப்படுத்தினாலோ சுடப்படும் என்ற நிலையில் கூட " கரும்புலிகள் நாள் , மாவீரர்நாள் , தேசிய தலைவரின் பிறந்த நாள் போன்றவற்றினை வருடம் தவறாது அதற்கான உணர்வுடன் செய்து வந்தவர்கள் அந்த சின்ன பிள்ளைகள் தான்
சமாதான காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் செயல்பாட்டுக்கு என்று யாழ்ப்பாணம் வந்த போது யாழ் மக்களையே ஓன்று திரட்டி , அவர்களுக்கு வரவேற்பு கொடுத்து அவர்களை திக்குமுக்காட வைத்தது மட்டுமல்ல புலிகள் தான் தமிழ் மக்களின் தலைமை என்று செயல் மூலம் நிரூபித்தவர்கள் இந்த சின்ன பிள்ளைகள் தான்
கருணா பிரச்னை வந்த போது அந்த பிரச்னை தொடர்பான விளக்கம் கொடுக்க விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்கள் முதலில் வந்தது இந்த சின்ன பிள்ளைகளிடம் தான்
இன்று இவர்கள் மீட்ட நிலங்கள் எத்தனை ? இவர்கள் நின்ற களமுனைகள் எத்தனை ? என்று கேட்பவர்களுக்கு சமாதான காலத்திலும் சமாதான காலத்தின் இறுதி பகுதிகளிலும் வீர சாவடைந்த பல்கலை கழக புலி வீரர்களை தெரிய நியாயம் இல்ல
இந்த சின்ன பிள்ளைகள் நிலம் மீட்கல தான் . களமுனையில் நின்று போராடலை தான் . ஆனால் களமுனையில் நின்றுபோராடியவர்களும் நிலங்களை மீட்டவர்களும் நின்று தங்களை உரமாக்கிய இடங்களில் ஓன்று இந்த சின்ன பிள்ளைகள் வாழும் இடத்தில தான்
போராட்டம் என்றால் தனியே முன்னின்று அடிபடுவது மட்டும் அல்ல .அதுக்கு பின்னால் பல வேலைகள் இருக்கு என்பது அதை எல்லாம் யார் யார் செய்தார்கள் என்பது எல்லாம் சின்ன பிள்ளைகள் என்று சொல்கிற இவர்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல
மாணவர் சக்தி என்பது மிக பலமானது . மாணவர்களாக போராட வெளிக்கிட்டபோராட்டம் தான் பரிமாண வளர்ச்சியடைந்து ஈழ போராட்டமாக மாறியது என்பதை எல்லோரும் ஞாபகம் வைத்திருங்கள்
அவர்கள் தவறுகள் அவர்கள்திருத்துவார்கள் .
தவறுகள் சுட்டி காட்டப்படவேண்டியவை அல்ல . திருத்தப்பட வேண்டியவை என்ற கூற்றை கூறியவர் யார் என்பதை ஒரு கணம் நினைத்து பாருங்கள்
நன்றி
No comments
Post a Comment