நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் சிறீதரன் எம்.பி முக்கிய கலந்துரையாடல்.
தகுதி இருந்தும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாத கிளிநொச்சி மாவட்டத் தொண்டர் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது அலுவலகத்தில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ளது.
தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக தற்போது நடைபெறும் நேர்முகப் பரீட்சைக்கு உரிய தகுதி இருந்தும் அழைக்கப்படாத கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வலியுறுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் எதிர்வரும் 23.04.2018 ஆம் திகதி திங்கட் கிழமை காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலுக்கு வரும் தொண்டர் ஆசிரியர்கள் தமது ஆவணங்களையும் தம்முடன் எடுத்து வருமாறு கேட்க்கப்பட்டுள்ளார்கள்.
உரிய தகுதி இருந்தும் நிரந்தர நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாத கிளிநொச்சி மாவட்டத் தொண்டர் ஆசிரியர்களை உரிய தினத்தில் ஆவணங்களுடன் தவறாது கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அறிவித்துள்ளார்.
No comments
Post a Comment