கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவித்துள்ளார். தமிழக அரசுக்கு எதிராக நீண்டகாலமாக கருத்துகளை தெரிவித்து வந்த கமல்ஹாசன் அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இதன் கொள்கைகளையும், கொடியையும் மதுரை பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
அன்றைய தினமே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டன. இதில் முன்னாள் காவல் துறை அதிகாரி மவுரியா, அடையாறு மாணவர் நகலக உரிமையாளர் சௌரிராஜன் உள்ளிட்ட பலர் சேர உருதுணையாக இருந்தவர் வழக்கறிஞர் ராஜசேகரன். கருத்து வேறுபாடு காரணமாக வழக்கறிஞர் ராஜசேகரன் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், கடந்த 6 மாதங்களாக கட்சி உருவாவதற்காக பாடுபட்டேன். ஆனால் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. மேலும் கட்சியில் உரிய மரியாதையும் கிடைக்கவில்லை. என்னுடைய வழக்கறிஞர் தொழிலை சரியாக பார்க்க இயலவில்லை. இத்தகைய காரணங்களால் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார்.
No comments
Post a Comment