Latest News

March 06, 2018

இலங்கை முழுவதும் அவசரகாலச்சட்டம் அமுல்
by admin - 0

நாடு முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதியுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 




இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வௌியிடப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கண்டி - திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் நேற்றைய தினம் அசாதாரண நிலை ஏற்பட்டிருந்ததையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. 



இவ்வாறான நிலையிலேயே தற்போது நாடு முழுவதும் அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments