இந்த இரகசிய வாக்கெடுப்பில் வேறு யாரும் கூடுதலான வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டால் அவர் நிர்வாகத்தை நடத்த முடியும். அவ்விடயத்தில் நாங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வோம். நாங்கள் விரும்பாத பகுதியைச் சேர்ந்தவர் நிர்வாகத்தை அமைத்தால் நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்தப் போவதில்லை.
இரகசிய வாக்களிப்பு தொடர்பில், அல்லது ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் வேறு எந்த கட்சியுடனும் பேசவில்லை. அப்படியான பேச்சுக்களை நடத்தப் போவதும் இல்லை. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் எம்முடன் இது தொடர்பில் பேசியுள்ளார்கள். எமது வேட்பாளருக்கு ஆதரவு தர விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாநகர முதன்மை வேட்பாளர் இமானுவேல் ஆர்னோல்ட் பல இடங்களில் மதவாதத்தை கையில் எடுத்து, தான் ஒரு கிறிஸ்தவர் என்றதால் தமிழ் தேசிய பேரவை தன்னை எதிர்ப்பதாக வழமை போன்று அப்பட்டமான பொய்யை சொல்லி வருகின்றாதெனவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளராக இமானுவேல் ஆர்னோல்ட் சுமந்திரனால் முன்மொழியப்பட்டுள்ள போதும் அதனை கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்பவில்லையென தெரியவருகின்றது.
அவர்கள் முன்னணியின் வி.மணிவண்ணனை முதல்வராக்க விருப்பம் கொண்டுள்ள நிலையில் தற்போது இரகசிய வாக்களிப்பில் ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
No comments
Post a Comment