இன்று லண்டன், இலங்கை தூதரகத்தில் இருந்து வெளியே வந்த இராணுவ அதிகாரி தூதரகத்தின் முன் நின்று போராடிக்கொண்டிருந்த தமிழர்களை பார்த்து "கழுத்தின் குறுக்கே கையை வைத்து அறுத்து விடுவேன்" என்று சைகை காட்டினார்..இதற்கு அங்கு நின்ற பல ஊடகவியலாளர்கள் சாட்சி..
பிரித்தானியாவில் நின்று கொண்டே , எந்த பயமின்றி கொலை அச்சுறுத்தல் விடும் இந்த இலங்கை இராணுவ அதிகாரி...ஈழமண்ணில் எப்படி தமிழர்களை கொன்று இருப்பார்...
உலகே உனக்கு கண் இல்லையா ?
புலிக்கொடிகளை ஏந்தியவாறு பல்கோரிக்கைகைள முன்வைத்து கோசம்
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினமான இன்று பிரித்தானியாவில் புலம்பெயர் வாழ் தமிழர்களினால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஒன்றுதிரண்ட அவர்கள் புலிக்கெடிகளை கைளில் ஏந்தியவாறு இலங்கையில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழரின் பாரம்பரிய பறை இசையின் முழக்கத்துடன் காணாமல் போன எமது உறவுகள் எங்கே? எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பிய பட எதிர்ப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழரின் பாரம்பரிய பறை இசையின் முழக்கத்துடன் காணாமல் போன எமது உறவுகள் எங்கே? எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பிய பட எதிர்ப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
புலிக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தமிழர்கள்
No comments
Post a Comment