ஶ்ரீலங்கா நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என, அக்கட்சியைச் சேர்ந்தவரும் நாட்டின் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால, இன்று (18) இரவு தெரிவித்தார்.
அதேபோல், தேசிய அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவைத் தெரியப்படுத்தியுள்ளதாக, சு.க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவும் தெரிவித்தார்.
இதைத் தவிர, புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானத்தை, ஜனாதிபதி கோருவாரெனவும், திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.
No comments
Post a Comment